பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ኧ(ኻ இராமர் செய்த கோயில் அறகொன டகளைச் சேதுபதி மன்னர்கள் ஏற்படுத்தி இருப்பதுடன் இந்த விழாக்களின் பொழுது சுவாமி. அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள உற்சவமூர் த்திகள் அழகான தங்க வெள்ளி வாகனங்களில் ரதம் தேடகங்களையும் செய்து வழங்கியுள்ளனர். மேலும், இந்த விழாக்களின் பொழுது சுவா மி. அம்பாள் ஆகியோருக்கு மட்டும் அணிவிப்பதற்காக தனியாக விலையுயர்ந்த பொன். வைர அணிகலன்களை யும் சேதுபதி மன்னர்கள் செய்து வழங்கியுள் ளனர். இந்த அணிமணிகளைத் திருமேனிகளுக்கு சாத்தி அலங்காரம் செய்வதற்கென்றே திருக்கோயில் பணியாளர்களில் அலங்காரப் பட்டர். கைவித்தாரம் என்று அழைக்கப்படும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்றைய நிலையில் தமிழகத்தில் பூரீரங்கம் திருவாரூர். சிதம்பரம் மற்றும் மதுரையை அடுத்துச் சிறப்பாகவும் தொடர் விழாக்கள் நடைபெறும் தலமாகவும் இராமேஸ்வரம் திருக்கோயில் விளங்கியதால் சேதுபதி மன்னர்கள் அனைவரும் பதினேழாம் நூற்றாண்டு தொடக்கம் முதல் கோயில் விழாக்களில் மிகவும் ஈடுபாடு கொண்டு இந்த விழாக்கள் நடைபெற தனியாக ஏற்பாடுகள் செய்ததுடன் இந்த விழாக்கள் மக்களைக் கவரும் வண்ணம் உற்சவமூர்த்திகள். அவைகளுக்கான அனிமனிகள். அலங்காரப் பொருட்கள். பல்லக்குகள், சப்பரம் தேடகம். வாகனங்கள் ஆகியவைகளையும் தேவைப்படும் பொழுது எல்லாம் தேர்ந்த பொற்கொல்லர். மரத்தச்சர் மற்றும் கைவினைஞர்களைக் கொண்டு செய்வித்து இந்த திருக்கோயிலுக்கு வழங்கியுள்ளனர். இதனால் சோழப் பேரரசர்கள். பிற்காலப் பாண்டியர் களுக்குப் பிறகு வேலை வாய்ப்பில்லாமல் இருந்த பொற்கொல்லர் களுக்கும். மரத்தச்சு ஆசாரிகளுக்கும் சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் வேலை வாய்ப்பும் பாரம்பரிய கலைகளை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பும் கிட்டியது.