பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q() இராமர் செய்த கோயில் திருக்கோயிலின் முதற் பிரகாரத்தில் 1 14 விக்கிரகங்களும், இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் புஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோயிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள்தோறும் புஜை நடத்தப்படுகின்றது. வெள்ளிக்கிழமை இரவு மலைவளர்க் காதலி அம்மன் கொலு முடிந்து தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வரும் பொழுது மேல்கோபுர வாசலுக்கு அன்மையில் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் திருவுருவச் சிலைக்கு பரிவட்டம் சூட்டும்முறை இன்றும் இருந்து வருகிறது. தாய்லாந்து மன்னர் முடிசூட்டும் பொழுது கங்கை நீரினால் நீராட்டும் சடங்கு ஒன்று அங்கே உள்ளது. இதனைச் செய்பவர்கள் உச்சிக்குடும்பி வைத்துள்ள ஆத்திக மக்கள். இவர்களது முன்னோர்கள் இராமேசுவரத்தில் இருந்து சென்று தாய்லாந்தில் நிலைத்தவர்கள் எனத் தெரிய வருகிறது. 大大大大 இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமிக்கோயில் நிர்மானித்து முடிந்த பிறகு அங்கு குடமுழுக்கு நடத்தவும் பின்னர் தொடர்ந்து கோயில் வழிபாடுகளை முறையாக நடத்துவதற்கு இராமேசுவரத்து அந்தணர்களை இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இராமேசுவரத்தில் இருந்து அனுப்பி வைத்ததாகப் பதினாறாவது நூற்றாண்டு இலக்கிய மான கைலாயமாலை தெரிவிக்கிறது. 大大大大 பாரத நாட்டின் மிகுந்த புனிதத் தலங்களாக நான்கு தலங்கள் மட்டும் சதுர்தாம் கருதப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத் (என்ற இராமேசுவரம்) சைவ வைணவ ஒருமைப்பாட்டுத்தலம். எஞ்சிய மூன்று தலங்களும் வடநாட்டில் அமைந்து இருப்பன. இவை துவாரகநாத். பத்ரிநாத். கேதாரிநாத் என்ற வைணவத் தலங்கள். 大 ★大大