பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் Q5 நாயக்கமன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரது ராஜகுரு இராமேஸ்வரம் சென்று சடைக்கன் உடையான் சேதுபதியின் சொந்தப் பாதுகாப்பில் மதுரை திரும்பிய நிகழ்ச்சி இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும் திருக்கோயிலில் நடைபெறுகின்ற அபிசேகம். நைவேத்தியம். பூஜை ஆகியன சிறப்பாகவும். ஆகம விதிகளின் படியும் நடைபெறுவதற்கும் அவற்றைக் கண்காணிப்பதற்கும் இராமேசுவரம் திருக்கோயிலில் ஆதினகர்த்தர் ஒருவரையும் சேதுபதி மன்னர் நியமனம் செய்தார் எனத் தெரிகிறது. இராமநாத சுவாமியின் கைங்கரியத்திற்காக நியமனம் - - - - - # * பெற்றதால் இவர் சுவாமியின் பெயரால் இராமநாத - . לי - +. - i - 1 / sхот Lгт гт Lг. ո I - T அழைககப்படடாா. இத்தகைய ஆதிகைர்த்தர்கள் தஞ்சை மாவட்டத்தில் அப்பொழுது திருவாவடுதுறை. திருப்பனந்தாள். தருமபுரம் ஆகிய ஊர்களைத் தலைமையிடமாகக் கொண்டு இருந்தனர் என்பது நினைவு கூறத்தக்கது. இத்தகைய திருக்கோயில் அலுவலரது சிறப்பான பணியினைத் தெரிவிக்கக் கூடிய ஆவணங்கள் அருகி மறைந்துவிட்டன. இந்தப் பணியில், தஞ்சைத் தரணியில் உள்ள வேதாரணியத்துத் தமிழ் வேளாள சமூகத்தைச் சேர்ந்த சைவ இலக்கிய ஆகமம் கற்ற துறவிகள். பொறுப்பில் இருந்து வந்தனர். திருச்சியில் நாயக்கமன்னர்கள் ஆட்சியின் பொழுது திருமறைக் காட்டு வேளாளர் சமூகத்தினரில் ஆன்மீகத் துறையில் சிறந்து விளங்கிய தாயுமானவ அடிகள் பின்னர் துறவி நிலையில் புகழ் பெற்றதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இராமேசுவரம் திருக்கோவில் செப்பேடுகள் சென்னையில் உள்ள அரசு ஆவனக் காப்பகத்தில் உள்ள ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து தொகுத்த செய்திகள் வருமாறு. 1) Taylor-Old Historical Manuscripts (1851) ['art - ||