பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L}() இராமர் செய்த கோயில் இராமேக வரம் இராமநாதப் பண்டாரம் பதவி வகித்தவர்களுககு இராமேசுவர ம் திருக்கோயிலின் ஒரு பகுதியில் மடம் இருந்து வந்தது. இந்த மடத்திற்கு பிச்சர் மடம் எனப் பெயர் வழங்கப்பட்டது. இதில் குடிகொண்டிருந்த ஆதினகர்த்தர். நாள்தோறும் வைகறையில் இருந்து நடுச்சாமம் வரை திருக்கோயிலில் நடைபெறும் அனைத்துக் கோயில் காரியங்களையும் கண்காணித்து வந்தார். திருக்கோயிலுக்கு இடை இடையே வருகை தந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள். இராமநாத பண்டாரத்தின் பணியினைப் பார்வையிட்டு அவருக்குத் தக்க பரிந்துரைகளையும் வழங்கி வந்தனர். இந்தப் பரிந்துரைகளைக் கொண்ட இரு செப்பேடுகள் கிடைத்துள்ளன. ஒன்று கி.பி.1627 ம் ஆண்டு கூத்தன் சேதுபதியினது. மற்றொன்று கி.பி. 1647ம் ஆண்டு திருமலை ரகுநாத சேதுபதியினது. இந்த இரு செப்பேடுகளுக்கும் இடையில் இருபது ஆண்டுக்கால இடைவெளி இருந்தாலும் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரை ஒரே பொருள் பற்றியதாகும். இந்தச் செப்பேடுகள் வழங்கப்பட்டதில் கால வேறுபாடு இருந்தாலும், அவைகளை வழங்கிய சேது மன்னர்களது கருத்தில் மாறுபாடு இல்லையென்பதை அவைகளின் வாசகம் அறுதியிட்டுக் குறிப்பிடுவதாக உள்ளது. இந்தச் செப்பேடுகளில் இருந்து இராமேசுவரம் திருக்கோவி லுக்கு வரக்கூடிய வருவாய்களை இருவகையாகப் பிரித்து வரவு வைத்தனர். முதலாவது கோயில் உள்துறைக் கட்டளை எனப்படும். திருக்கோயில் பயன் பாட்டிற்கெனச் சேது மன்னர்களும் பிறரும் தானமாக வழங்குகின்ற திரவியங்கள். பூமி முதலியன பொதுவாகக் கோயில் அபிசேகம். I I oᏡ & . நைவேத்தியம். உத்சவம் ஆகியவற்றிக்குப் பயன்படுத்தப்பட்டன. இரண்டாவது, சேதுபதி மன்னர் சிலர் விசேட பூசைகள். கட்டளைகள். உத்சவங்கள் நடத்துவதற்கென