பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 97 அவ்வப்பொழுது வழங்குகின்ற தானங்கள். சேது மன்னரது அறக்கட்டளையென இது வழங்கப்பட்டது. இரண்டாவது வகையான கட்டளையில் சேது மன்னர் களது 'சொந்தத் திரவியங்கள்” மட்டும் சேர்க்கப்பட்டன. மன்னரது அலுவலர்கள். பாளையக்காரர் போன்றோர் மன்னரது பிரீதியைப் பெறுவதற்காகச் சுவாமிக்கு வழங்குகின்ற பொருட்களைக் கோயில் உள்துறைக் கட்டளையில்தான் சேர்க்க வேண்டும் என்பது சேது மன்னர்களது கண்டிப்பான உத்தரவு. இந்தக் கடுமையான உத்தரவுக்கு மன்னர்கள் கொடுத்துள்ள விபரம் மனதை நெக்குருக வைக்கிறது. 'பிறத்தியாரது பாவத் திரவியங்களாக இருக்குமாதல் நம்முடைய கட்டளையில் அவைகளை வாங்கி நடப்பிக்கத் தேவை இல்லை” என்பது அதாவது தெய்வீகக் காரியங்களுக்கு திமையல்லாது ஈட்டப்படும் சொந்த திரவியங்களைத்தான் செலவழிக்க வேண்டுமென்ற கருத்துடையவர்களாக இருந்தனர் அந்த மன்னர்கள். மேலும் தமிழ்நாட்டில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத முறையில் இந்தக் கோயில் பணிக்கெனக் குறிப்பாகக் கருவறைப் பணிகளுக்கென மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த குருக்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். பதினைந்தாவது நூற்றாண்டு முதல் தான் சேதுபதி மன்னர்களது திருப்பணிகள் இராமேசுவரம் கோயிலில் தொடரப்பட்டுள்ளதாகக் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக் கின்றன. இதற்கு முந்தைய கால ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆனால் பூரீரங்கம், தஞ்சாவூர். சிதம்பரம். காஞ்சிபுரம் போன்ற (பத்தாவது பதினோராவது நூற்றாண்டைச் சேர்ந்த) 1) கமால் டாக்டர் எஸ்.எம்.சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1992). செப்பேடு எண் 6, 11