பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முறை புளிவைத்து விளக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.'

இவை தவிரத் திருக்கோயிலுக்குச் சர்வமான்யமாக விடப்பட்ட தோப்பு. நிலம். கிராமம் ஆகியவைகளில் பெற வேண்டிய வருவாய்களையும். கண்ணும் கருத்துமாக இருந்து பெற்றுத் திருக்கோயில் கருவூலத்தில் சேர்ப்பரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது இராமநாத பண்டாரத்தின் பணிகளில் முக்கியமானதாக இருந்து வந்தது. மற்றும் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, விசுவநாதர் சன்னதி, உண்டியல்களில் கிடைக்கின்ற ஆதாயம். ருத்ராபிசேகம் பஞ்சாமிர்தம் பட்டு, பருத்தி, பொன். வெள்ளி, பொட்டுகள் ஆகிய உபயங்கள் இராமேசுவரம் சேதுமாகாளி அம்மன், நம்பு நாச்சியம்மன் கோவில்களில் கிடைக்கின்ற உபயங்களும். இராமேசுவரம் திருக்கோயில் வருவாய் இனங்களாகக் கொள்ளப்பட்டன. _கடற்கரையில் தோணிகளுக்கு வழங்கப்படுகின்ற கடவுச் சிட்டுப் பணம், பாடிகாவல், தரகன் சுவந்திரம். இராமேசுவரம் கடை வீதியில் விற்பனையாகும் 100 மரக்கால் தானியத்திற்கு ஒரு மரக்காலும், எண்ணெய். தேன். நெய் ஆகியவைகளுக்கு I () () படிக்கு ஒருபடியும். எண்ணிக்கையில் விற்கப்படுகின்ற பொருட்களுக்கு 100-க்கு ஒன்றே முக்காலும், உள்ளுர் வணிகர்களுக்கு 100-க்கு ஒன்றும். நிறுக்கப்பட்ட பொருட்களுக்கு 100-க்கு ஒன்றேகால் பணமும், மகமை பத்துப் பொன்னுக்கு அரைப்பனமும், பாம்பன் துறை வழியாக இராமேசுவரம் வரப்பெறும் நெய்சுமை ஒன்றுக்கு ஒன்றரையே மாகாணிப் பணமும், மேலும் காளை மாடுகளுக்குச் சூலம் போடுதல், அவைகளை அக்கரைக்கு ஏற்றி அனுப்புதல். அரண்மனைப் பட்டியில் உள்ள பயனற்ற பசுக்கள். அனாதைப் பினங்களின் ஆதாயங்களும், கோயில் வருவாய்களாகக் கொள்ளப்பட்டதாக கி.பி. 1714ம் ஆண்டு செப்பேடு வழி அறிய முடிகிறது.

1) கமால் டாக்டர் எஸ்.எம். சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1993) செப்பேடு எண் 37 இராம - 8