பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | ()3 வலுப்பெற்று - இந்தத் தமிழ் மண்ணின் பாரம்பரிய ஆட்சியாளராக இருந்த தஞ்சாவூர். புதுக்கோட்டை சிவகங்கை இராமநாதபுரம் மன்னர்களது தன்னரசுத் தன்மையையும் பல தலைமுறைகளாகப் பாளையங்காரர்களாக வாழ்ந்த மக்கள் தலைவர்களது சுவாதினத்தையும் தறித்துச் சுருக்கியது. இந்தச் சூழ்நிலையில் கி.பி.1772-ல் சேதுபதியாக இருந்த இளம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி போரில் தோற்கடிக்கப்பட்டுத் திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் கைதியாக அடைக்கப் பட்டார்.' இதனால் சேதுபதி மன்னரது சிறப்பான கோவிலின் அன்றாட நடைமுறைகள் தடைபட்டு கோயில் கருவறைகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டன. இந்நிலையில், இராமேசுவரம் திருக்கோயில் குருக்களும். கட்டளை காரியஸ்தர்களும் சென்னை சென்று நவாப்பைப் பேட்டி கண்டனர். கோயில் தரும கர்த்தாவான சேதுபதி மன்னர் சிறையில் இருப்பதால், கோயிலில் பூஜை முதலான நடைமுறைகள் தடைப்பட்டுள்ள அவலத்தை அறிந்த நவாப். கோயில் ஆதினகர்த்தரான இராமநாத பண்டாரத்தின் பொறுப்பில் கோயில் காரியங்களை நடத்திவருமாறு கோயில் குருக்களுக்கு ஆணை பிறப்பித்தார். 28.08.1772 தேதி முதல் இராமநாத பண்டாரம், சேது ராமநாதபண்டாரம் என்ற பெயரில் இராமேஸ்வரம் கோயிலின் ஒ () த, ப 11 அது நடைமுறைகளை கண்காணித்து வந்தார்." ஆனால் ஜூலை 1781-ல் சேதுபதி மன்னருக்கும் நவாப்பிற்குமிடையே கையெழுத்தான கோட்டைப்பட்டின ஒப்பந்தப்படிச் சிறையில் இருந்த சேது மன்னர் மீண்டும் இராமநாதபுரம் அதிபதியானார். மன்னர் இல்லாத இந்த 1) Rajayyan Dr. K. History of Madurai (1972) Page 0S TT TT TT TT TTT TT TT T TT T TTT TT TT TSTT TTTT S 0000 0S TTTT TTT TTT TTTTT TTTTT TT TT TT TT TT TTT S 0000