பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

நமது நாட்டில் பரவலாகப் பாமரரும் கேட்டு ரசித்து ஏற்றிப் போற்றும் ஒரு காவியம் இராமாயணம் ஆகும். இந்தக் காவியம் எப்பொழுது யாரால் புனையப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வடமொழியில் வான்மீகி முனிவர் வரைந்த இராமாயனக் காப்பியம் மக்களால் தொடர்ந்து படிக்கப்பட்டு வருகிறது. இதனை அடியொற்றி இந்திய நாட்டின் பல மாநிலங்களில். அந்தந்த மாநில வட்டார மொழிகளில் இராமாயணம் மறு உருப்பெற்று வந்துள்ளது.

தமிழில் மகாகவி கம்பனும், தெலுங்கில் அல்லூரி பெத் தண்ணாவும் ஹறிந்தியில் சந்த்துளசிதாசரும். மலையாளத்தில் ஆசான் எழுத்தச்சனும் இதேபோன்று கன்னடம், மராட்டியும். கொங்கணி. குஜராத்தி. போஜ்புரி. ஒரியா, வங்காளி. அஸ்ஸாம் போன்ற பல இந்திய மொழிகளிலும் இந்த இராமாயணக் கதை பக்திச்சுவையுடன் புனையப்பட்டு மக்களுக்குப் பயன்பட்டுவருகிறது.

இன்னும் நமது நாட்டைத் தவிரக் கிழ்த்திசை நாடுகளான இந்தோனேசியா. தாய்லாந்து. கம்போடியா ஆகிய நாடுகளிலும் இராமாயணக் கதையின் தாக்கம், வலுவுடன் விளங்கி வருகிறது. இங்கெல்லாம் இந்தக் கதையின் பாத்திரங்களின் பெயர்களும், பண்புகளும். மாற்றமாக அமைந்திருந்தாலும் இந்த இலக்கியத்தின் அடி நாதமான