பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| () இராமர் செய்த கோயில் அவர்களுக்கு மன்னர் மீது ஒரு அருவறுப்பு கr ன பம் அவர்கள் படித்திருந்த இந்து சமய சாத்திரங்களில் மன்னர் ஆழ்ந்த அறிவுடையவராக விளங்கினார். அடுத்து அவர்கள் மன்னா மீது தொடுத்த எதிர்ப்புக்கனை. மன்னர் பிராமனர் அல்லாத இந்து மறவராக இருப்பதும் அவர் புலால் உண்னும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஆகும். இதனால் திருக்கோயிலின் திருஆபரணங்களைக் சிா ட அவர் தொடக்கூடாது என்பதும் அவர்களது வாதம் ஆகும். ஆனால் அதே சமயத்தில் தமது பதவிக்கும் திருக்கோயிலின் புனிதத்திற்கும் திராத களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பண்டார சன்னதியின் மீது அவர்களது பார்வை பதியவில்லை. தமக்குள்ள பல பிரச்சினைகளுக்கு இடையில் இந்த மராட்டிய பிராமணர்களுடனான ஊமைப் போரைத் தொடர்ந்து கொண்டு மன நிம்மதியை இழப்பதற்கு மன்னர் தயாராக இல்லை. இதனால் மனமுடைந்த பாஸ்கர சேதுபதி மன்னர் தமது ஆறு ஆண்டுகால கோயில் பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முறையில் அவரது தர்ம கர்த்தா பணியினை ராஜினாமா செய்தார். அப்பொழுது இராமேஸ்வரம் திருக்கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்த தேவகோட்டை ஜமீன்தாரும். மன்னரது மிக நெருங்கிய நண்பருமான கே.ஏ.எல்.ஏ.ஆர். இராமசாமி செட்டியார் அவர்களை அரசாங்கம், இராமேஸ்வரம் திருக்கோயிலின் மேனேஜராக 25.01.1901-ல் நியமனம் செய்தது. தொடர்ந்து சென்னையைச் சார்ந்த சனாதனச் செல்வர் பி.எஸ்.சிவ சுவாமி ஐயர் என்பவர் மதுரையில் உள்ள இராமநாதபுரம் ஜில்லா சப்கோர்ட்டில் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கான திட்டம் ஒன்றை தயாரித்தும் அதனை நிறைவேற்றி வைப்பதற்கான நிரந்தர அமைப்பில் தர் ம கர்த்தாக்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற