பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | || முறைப்பாட்டினை அந்த நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்தார். அப்பொழுது தமிழகத்தில் இந்து சமய அறநிலைய சட்டம் அமுலில் இல்லாத காரணத்தால் இத்தகைய தொரு திட்டத்தை நீதிமன்றம் தயாரித்து அமுலுக்கு கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதன் காரணமாக கி.பி.1913-ல் இராமநாதபுரம் ஜில்லா சப்கோர்ட் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கென நடைமுறைத் திட்டம் ஒன்றிற்கு ஒப்புதல் அளித்ததோடு கோயில் நிர்வாகத்தை நடத்துவதற்கான குழுவினரான இராமநாதபுரம் சேதுபதி மன்னரையும் தேவகோட்டை ஜமீன்தார் இராமசாமி செட்டியார் அவர்களையும் நிரந்தர டிரஸ்டிகளாக நியமித்தது. இந்தக் குழு மிகச் சிறப்பாக இயங்கி வந்ததுடன் இராமேஸ்வரம் திருக்கோயிலின் இரண்டாவது குடமுழுக்கு விழாவினையும் 6.2.1925-ல் மிகச் சிறப்பாக நிறைவேற்றி வைத்தது. அடுத்து 1922-ல் இந்து சமய அறநிலையச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. அரசியல் சூழ்நிலையின் காரணமாக இந்தக் கோயிலின் நிர்வாகக் குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும். ஜனநாயக முறையிலான மக்கள் பிரதிநிதிக்கும். பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் குழுவின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுக் குழுவும். பெருக்கமுற்றது. தொடர்ந்து பல மாறுதல்கள் ஆலய நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலரது நேரடியான மேற்பார்வையில் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1) கமால் டாகடர் எஸ்.எம். - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1990)