பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கோயில் வருவாய் இராமேசுவரத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனது தொண்டராக இறைப் பணியாளராக இராமநாத சுவாமியின் காரிய துவந்தரராகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சேதுபதி மன்னர்கள். இந்தத் திருக்கோயிலின் அனைத்துச் சிறப்புகளுக்கும் துணையாக இருந்து வந்தார்கள் என்பது வரலாறு. கி.பி. 1169-ல் இலங்கையர் பாண்டிய நாட்டில் படையெடுத்த பொழுது ஒரு சிறு கட்டுமானக் கருவறையுடன் இருந்த கோயில் இன்று கிழமேல் 860 அடிக்கு தென்வடல் 660 அடி என்ற அளவில் செவ்வக வடிவில் விரிவு பெற்று மூன்று நீண்ட பரந்த பிரகாரங்களையும். மூன்று விசாலமான சன்னதிகளையும் பல சிறு கோயில்களையும் கொண்டதாகப் பரந்து விரிந்து வளர்ந்து இருப்பதற்குச் சேதுபதி மன்னர்களது தளராத உழைப்பு. திருப்பணிகள் ஆகியவையே காரணங்களாகும். இத்தகைய கோயிலில் ஆகம முறைப்படி ஆறுகால பூஜைகளும், சந்திகளும், கட்டளைகளும். உத்சவங்களும் முறைப்படி ஒழுங்காக நிறைவேற்றத் தக்க பொருள் வசதி வேண்டும் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆதலால் சேதுபதி மன்னர்கள். இந்தச் செலவுகளுக்கு உடலாகப் பயன்படும் வண்ணம் எழுபத்து இரண்டு ஊர்களை (நமக்குக் கிடைத்த செய்திகளின்படி) இராமநாதபுரம். சிவகெங்கை, தஞ்சாவூர். மதுரை. திருநெல்வேலிச சிமைகளில் பல்வேறு சமயங்களில் இந்தக் கோயிலுக்குச் சர்வமான்யமாக வழங்கியிருக்கின்றனர். இந்தக் கிராமங்களில் இருந்து