பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3) சேதுப்பாதையில் அன்னதானம் மறவர் சிமையின் மன்னர்களான சேதுபதிகள். இணையற்ற இராமேஸ்வரம் திருக்கோயிலின் ஏற்றத்திற்கும் எழில் தோற்றத்திற்கும் எந்த அளவு தங்களையும் தங்களது ஆட்சியையும் அர்ப்பணித்து வந்துள்ளனர் என்பதை முன்னர் பார்த்தோம். இராமேஸ்வரம் திருக்கோயில் பற்றிய செய்திகள் பாரத நாடு முழுவதும் மெதுவாக பரவி வந்ததால் மக்கள் இதிகாச கால எச்சமாக விளங்கும் சேது அனை யையும் இராமேஸ்வரம் திருக்கோயிலையும் நேரில் சென்று தரிசித்து இறையருளைப் பெற வேண்டும் என்ற உந்துதலும் நாளுக்கு நாள் வலுத்து வளர்ந்து வந்தது. தொடக்கத்தில் கொங்கணம். கன்னடம், ஆந்திரம், மஹாராஷ்டிரம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த பக்த கோடிகள் இராமேஸ்வரத்திற்கு வருகை தரத் தொடங்கினர். இந்தப் புனிதப் பயணிகளின் போக்குவரத்து சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு விந்திய மலையையும். இராஜபுதன பாலைவனத்தையும் தாண்டிக் காஷ்மீர். நேபாளம், வங்கம். கலிங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் ஆண்டுதோறும் இராமேஸ்வர சேது யாத்திரை மேற்கொள்ளத் தொடங்கினர். மழையிலும் பனியிலும் நனைந்து வெய்யிலில் உலர்ந்து உடலும் உள்ளமும் வாடியவர்களாக வருடத்தின் பல மாதங்கள் கால்நடையாகவே இராமேஸ்வரம் வந்து சேர்வதை அறிந்த சேதுபதி மன்னர்கள் அந்தப் பயணிகளது நடைப் பயனத்தின்