பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X|| பெற்றோருக்குக் கிழிப்படிதல், சகோதர மாண்பு. மனிதநேயம், மறத்தை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற மனிதப் பண்புகளைச் சித்திரிக்கும் வகையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. இந்த இனையற்ற இராம.கதையின் பாத்திரங்கள் அனைத்தும் என்றும் நம்முன்னர் நடமாடுவது போன்ற நிழல் உருவம் நமது சிந்தனையில் தொடர்ந்து கொண்டே வருகின்றன. இராமாயனக் கதையின் நிகழ்வுக்களங்களான அயோத்தி, கங்கை. தண்டகாரண்யம். பஞ்சவடி கோதாவரி, கிர்ைகிந்தை மகேந்திரமலை, சேது அணை போன்ற இடங்களும் இன்றும் நிலைத்து நின்று அந்த இதிகாசத்தை நினைவூட்டும் காலச் சுவடுகளாக இருந்து வருகின்றன. என்றாலும் இராமாயனக் கதையில் சித்தரிக்கப்படும் அயோத்தி அரண்மனை இராமனும், சிதா பிராட்டியும் இலக்குவனும், மரவுரி தரித்து வாழ்ந்த பஞ்சவடி பர்னசாலை. இராமனும், இலக்குவனும் சுக்கிரிவனது உதவிக்காகக் காத்திருந்த கிஷ்கிந்தை நாட்டு மலைக்குகை, சிதாப் பிராட்டி சிறையிலிருந்த இலங்கை அசோகவனம் போன்ற இராமாயணம் சம்பந்தப்பட்ட நிகழ்விடங்கள் இன்று நமது காட்சியில் காணத்தக்கதாக இல்லை. இராமபிரானும் சிதாப் பிராட்டியும். வங்கக் கடற்கரையில் தங்களது திருக்கரங்களினால் அமைத்து வழிபட்ட சிவலிங்கமும், அதனையொட்டி எழுந்த இராமேஸ்வரமும், நமக்கு இராமாயண இதிகாசத்தை எளிதில் நினைவு கொள்ளச் செய்யும் தடயமாக அமைந்துள்ளது. பூரீ இராமபிரானது. ஈஸ்வரன் ஆலயமாகிய இராமேஸ்வரம் என்ற இந்தத் திருத்தலம் ஏறத்தாழ 1500 ஆண்டுகளாக நமது மக்கட் சமுதாயத்தின் நடுவரில் அமைந்திருந்து நாள் தோறும் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இந்திய மக்களைப் பரமபதத்தின்