பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3) செப்பேட்டுச் செய்திகள் கல்வெட்டுக்களைப் போல, வரலாற்றிற்கு சான்றாக அமைந்து உதவுபவை பட்டயங்கள் எனச் சொல்லப்படும். ஒலைப்பட்டயங்களும் செப்பேடுகளும், பல்லவர் ஆட்சியில் வழங்கப்பட்ட கூரம் செப்பேடுகளும் மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் (கி.பி.900 - கி.பி.920) வழங்கிய சின்னமனூர் செப்பேடும். இராஜேந்திரசோழன் வழங்கிய திருவாலங்காடு செப்பேடும் ஆகியன தமிழக வரலாற்றிற்கு மிகவும் துணை செய்வனவாக உள்ளன. இதனைப் போன்று இராமேசுவரம் திருக்கோயில் சம்பந்தமாக பலசெப்பேடுகள் பெரும்பாலும் சேது மன்னர்கள் வழங்கியவை இராமேசுவரம் திருக்கோயிலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் அரிய சான்றுகளாக விளங்குகின்றன. இராமேஸ்வரம் திருக்கோயிலின் அன்றாட வழிபாடுகள். ஆண்டுத் திருவிழாக்கள் மற்றும் சிறப்புக் கட்டளைக்களுக்கென சேதுபதி மன்னர்கள் வழங்கியுள்ள அறக்கொடைகளுக்குச் சான்றாக அவர்கள் வழங்கிய பல செப்புப்பட்டயங்கள் உள்ளன. இவைகளைத் தவிர திருக்கோயில் பணியாளர்களாக மராட்டா குருக்கள். தமிழ் ஆரியர் மற்றும் கோயில் திருப்பணியாளர்கள் வழங்கியுள்ள இசைவு முறிகள். ஆலய நிர்வாகம் பற்றிய சேதுபதி மன்னரது ஆனைகள். திருக்கோயில் பணியாளர்களுக்குச் சேதுபதி மன்னர் வழங்கியுள்ள காணி ஆட்சி உண்மை. திர்ப்பானை பற்றிய செப்புப் பட்டயங்களும் உள்ளன.