பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 இராமர் செய்த கோயில் இந்த ஆவணங்களிலும் பல கல்வெட்டுக்களிலும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத குறையனாலும் பல பட்டயங்கள் மறைந்துவிட்டன. இவைகளில் அப்பொழுது (கி.பி.1884-ல்) கிடைத்த பட்டயங்கள் இருபதை இந்திய அரசியல் தொல்லியல் ஆய்வுத் துறையினர் தொகுத்து வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து கி.பி. 1994-இல் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் S.M.கமால் அவர்கள் 90 பட்டயங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இராமேசுவரம் செப்பேடுகளில் மிகவும் பழமையானது கி.பி.1587ல் இராமேசுவரம் குருக்கள் மார் சபையார் மதுரை மன்னர் விரப்பநாயக்கருக்கு வரைந்து கொடுத்த பிடிபாடு பற்றியது. இந்தக் கால கட்டத்தில் இராமேசுவரத்தில் உள்ள மராட்டா குருக்கள் LO/Ist சமூகத்தில் நிலவிய சாதிக்கட்டுப்பாட்டின் கொடுமையையும் இந்தச் செப்பேடு கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது. பெரும்பாலான செப்பேடுகள் சேதுபதி மன்னர்கள் திருக்கோயிலின் வழிபாடு. விழாக்களுக்கு வழங்கிய அறக்கொடைகள் பற்றியன. என்றாலும் சில செப்பேடுகள் சேது மன்னர் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கிய வழிகாட்டு முறைகள். கோயிலுக்கு ஏற்படுத்தப்பட்ட வருவாய் இனங்களின் விவரங்கள். கோயிலில் நடைபெற்ற விழாக்கள். கோயிலில் பணியாற்றிய மராட்டா குருக்கள். தமிழ் ஆரியர் ஆகியோர் கோயிலில் மேற்கொண்டு இருந்த பணியை அதற்கு அவர்களுக்கு நிவேதனப்பொருள். சந்தனம் தாம்பூலம் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கிடு செய்யப்பட்ட பொன் முதலியன கோயிலில் இராமனாத பண்டாரத்திற்குக் கோயில் நிர்வாகம் தவிர சேதுபதி மன்னர்கள் வழங்கியிருந்த அதிகாரங்களைப் பற்றிய செய்திகளையும் இந்தப் பட்டயங்கள் தெரிவிக்கின்றன. சேது நாட்டை கி.பி.1772-ல் ஆற்காட்டு நவாப் ஆக்கிரமித்து இளம் சேதுபதி மன்னரைத் திருச்சிக் கோட்டைச் சிறையில் அடைத்து வைத்துக் கோயில் வழிபாடுகளை இரண்டு