பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. செப்புத் திருமேனிகள் கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் பாண்டியர்களது ஆட்சியில் கோடி நாடு என வழங்கப்பெற்ற இராமேசுவரம் பகுதி எத்தனையோ ஆட்சியாளர்களது வரலாற்றை வரம்பரிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. பாண்டியர். இராஷ்டிரகூடர், சோழர். சிங்களர் இஸ்லாமியர். நாயக்கர், சேதுபதிகள் எனப் பல்வேறு அரசுகளின் ஆதிக்கம். தாக்கம். செல்வாக்கு ஆகியவைகளின் கவட்!ை இ ரா மேக வரம் திருக்கோயிலும் அங்கு உள்ள அணிமணிகள். சேமக்கலங்கள். செப்புத் திருமேனிகள். சிற்பங்கள் ஆகியவை பிரதிபலித்துக் கொண்டுள்ளன. இவைகளில் சிங்களப்படையெடுப்பு (கி.பி.1169) தில்லித் தளபதிகள் மாலிக் நாயிப் என்ற மாலிக்கபூர் (கி.பி. 1311) குஸ்ராகான் படையெடுப்பு (கி.பி. 1318) திருமலை நாயக்கரது படையெடுப்பு (கி.பி.1639 - 1640) ஆகியவைகளினால் ஏற்பட்ட இழப்புகள் போக எஞ்சிய கலைப்பொருட்கள் மட்டும் இராமேசுவரத்தின் பழமையைப் பறைசாற்றும் கலைப் பெட்டகங்களாக விளங்கி வருகின்றன. இவைகளில் இங்குக் குறிப்பிடப்படுவன சில தொன்மையான செப்புத் திருமேனிகள். இராமேசுவரம் திருக்கோயிலில் இராமர் செப்புத் திருமேனிகள் இருந்து வருவதையும் அவைகளுக்கு நாள்தோறும் முறைப்படி வழிபாடுகள் நடத்தப்படுவதையும் முன்னர்க் குறிப்பிட்டு இருக்கிறோம். அவை அனைத்தும் சேதுநாட்டுச் சிற்பிகளால் பிற்காலத்தில் சேதுபதி மன்னர்கள் ஆட்சியின் பொழுது வடிவமைத்து வார்க்கப்பட்டவை. இவை நீங்கலாக இந்தக்