பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |35 கோயிலில் உள்ள சிறப்பான ஆறு செப்புத் திருமேனிகள் மட்டும் இங்கு விவரிக்கப்படுகின்றன. இந்த ஐந்து செப்புத் திருமேனிகள் இராமர் சிதை. இலக்குவன். அனுமன். துர்க்கை ஆகியவர்களது உருவங்களைக் கொண்டவை மற்றொன்று விநாயகரது திருவுருவத் திருமேனி. இந்த ஐந்து செப்புத் திருமேனிகளும் சோழ நாட்டில் கி.பி. பத்தாவது நூற்றாண்டில் வார்க்கப்பட்டவை. இராமேசுவரத்திற்கு வருகை தந்த முதலாம் பராந்தக சோழ மன்னனால் இந்த செப்புத் திருமேனிகள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது வரலாற்று ஊகம். இந்த மன்னன் கி.பி. 930-ல் இராமேஸ்வரத்தில் துலாபாரதானம் செய்துவிட்டுத் திரும்பிய பிறகு இந்தச் செப்புத் திருமேனிகளைக் சோழநாட்டில் தயாரித்து அன்பளிப்பாக அனுப்பி இருக்க வேண்டும். இராமேசுவரம் திருக்கோயிலில் இத்தகைய சிலைகள் இல்லாத குறையை நிறைவு செய்ததுடன் இராமேஸ்வரத்திற்கும் இராமாயண காவியத்திற்கு முள்ளத் தொடர்பை உறுதிப்படுத்தும் செயலாகவும் இந்த அன்பளிப்பை மேற்கொண்டு இருக்க வேண்டும். நான்கு கரங்களும் வலம்புரித் துதிக்கையும் கொண்ட விநாயகப் பெருமான், இராமர். சிதை, இலக்குவன். அனுமன் ஆகிய செப்புத்திருமேனிகள். சோழமன்னர்களது கலைப் பாணியைச் சார்ந்தவை என உறுதிப்படுத்தியதோடு சோழர்கள் ஆட்சியின் கிழிருந்த தொண்டை மண்டலத்தில் வடக்குப் பருத்திக்குடி. பகாயூர் ஆகிய ஊர்களில் கண்டு எடுக்கப்பட்ட இராமர். சிதை. இலக்குவன் சிலைகளை ஒத்தனவாக உள்ளன எனத் தொல்பொருள்துறை இயக்குநரான டாக்டர். நாகசாமி அவர்கள் ஆய்ந்து கூறியுள்ளார்கள்.' l) Dr. R. Nagasamy - South Indian Studies - Part - I I