பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - I இமயம் முதல் குமரிவரை நமது நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ளவர்களைத் தெற்கே தொலைதுாரத்தில் உள்ளவர்களுடன் உணர்வுப் பூர்வமாக ஒன்றுபடுத்திக் குறிப்பிடுவதற்கு அரசியலார் அண்மைக் காலம்வரை பயன்படுத்திய வழக்கு “இமயம் முதல் குமரி வரை” என்பதாகும். இதையே நாமக்கல் கவிஞர் "இமயம் தொட்டு குமரி மட்டும் இசை பரந்த மக்கள் நாம்”. என்று பாடியுள்ளார். நன்கு உயர்ந்த இமயமலை ஏறத்தாழ இரண்டாயிரம் மைல் நீளத்தில் கிழக்கு மேற்காக நாட்டின் வட எல்லையாக அமைந்திருப்பது ஒரு முக்கியக் காரணமாகும். அத்துடன் பரம்பொருளும் பனிக்கரசனுமான பரமசிவனும் அவரது உடலின் இடது பாகத்தைத் தமது உறைவிடமாகக் கொண்ட பர்வதவர்த்தினி என்ற பார்வதியும் வசிக்கின்ற கைலாசம் இந்த மலைத் தொடரின் முகட்டில் அமைந்து இருப்பதாக நமது மக்கள் கருதி வருவது இன்னொரு காரணமாகும். இந்தத் தெய்வீகத் திருத்தலமாகிய புனித மலையைப் பன்னெடுங் காலமாக மக்கள் போற்றி வந்துள்ளனர். மகாகவி பாரதியாரும் "மண்ணும் இமயமலை எங்கள் மலையே....... ** எனப் பாடியுள்ளார். கைலாச யாத்திரை மேற்கொண்ட காரைக்கால் அம்மையார் இந்தப் புனித மலையகத்தில் தம் கால்களைப் பதித்து மாசு படுத்தக் கூடாது என்ற நோக்கில் தமது தலையைப் பதித்து அந்த மலைப் பகுதியைக் கடந்தார்