பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 4 | குர்ஆனிலும் காணப்பட்ட பொழுதிலும் அவர்கள் இங்கே எப்பொழுது அடக்கம் செய்யப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் இராமநாதபுரம் சேதுபதி மன்னரான குமார முத்து விஜய இரகுநாத சேதுபதி இந்தப் புனித இடத்தின் திப. துப. பராமரிப்புச் செலவிற்காக இராமநாதபுரத்தை அடுத்த புதுக்குளம் என்ற கிராமத்தை (எக்கக்குடி) கி.பி. 1744 -இல் சர்வ மானியமாக வழங்கி உள்ளதற்கான செப்புப் பட்டயம் இந்த புனித இடத்தின் நிர்வாகியிடம் இன்றும் உள்ளது.' 4) ஏகாந்த இராமர் கோயில் இராமபிரான் தெற்குக் கடலைக் கடந்து இலங்கை செல்வதற்காக தமது வானரப் படைகளுடன் இங்கு ஆலோசனை செய்தார் என்பது ஐதிகம். அகநானூற்றுப் பாடல் ஒன்றும் இதனைச்சுட்டுவதாக உள்ளது என்பர். ஆனால் இந்த நிகழ்ச்சி கம்ப இராமாயணத்தில் குறிக்கப்படவில்லை. இராமேஸ்வரத்தில் இருந்து மேற்கே பாம்பன் செல்லும் நெடுஞ்சாலை அருகே இந்த சிறுகோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மேற்குப் புறத்தில் மங்கள திர்த்தமும், வடபுறத்தில் ஒரு அழகிய குட்டையும் நிர்மானிக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த நிலையில் இருந்த ஆலயத்தை அண்மையில் வடநாட்டு பிரமுகர் ஒருவர் திருப்பணி செய்துள்ளார். கோயிலின் உள்ளே மகா மண்டபமும், அதனை ஒட்டிய கருவறையும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கருவறையில் அமைந்துள்ள இராமர். இலக்குவன். சிதாபிராட்டி அனுமர் ஆகியோர்களது திருமேனிகள் கல்லில் சிறப்பாக வடிக்கப்பட்டு நாள்தோறும் பூஜை செய்யப் படுகின்றன. இராமரது அருகில் நிற்கும் அனுமன் மிகவும் 1) கமால் டாக்டர் எஸ்.எம். - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1990)