பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 43 மக்களான சினி நாச்சியார். லெட்சுமி நாச்சியார் ஆகியோரது கணவரும். மன்னரது மருமகனான தண்டத்தேவர் என்பவரை இராமேஸ்வரம் திவில் ஆளுநராக நியமித்து இருந்தார். தற்போதைய தங்கச்சிமடம் கிராமத்தில் அவரது மாளிகை அமைந்திருந்தது. பாம்பனிலிருந்து இராமேஸ்வரம் வரை செல்வதற்கான சாலை வசதி எதுவும் அந்தக் காலத்தில் இல்லாததால் புதிய சாலை ஒன்றை அமைக்க தண் டத்தேவர் இராமேஸ்வரம் யாத்திரை செல்லும் பயணிகளிடம் ஒரு சிறிய தொகையை வரிப்பணமாக வசூலித்தார். இதனைக் கேள்வியுற்ற சேதுபதி மன்னர். தமது ஒப்புதல் இல்லாமல் வரியை வசூலித்ததற்காக அதன் வழி சேது யாத்திரை பயணிகளுக்குத் தொந்தரவு கொடுத்துச் சிவத் துரோகம் செய்துவிட்டார் என முடிவு செய்து தண் டத் தேவருக்கு மரண தண்டனை வழங்கினார். இதை அறிந்த மன்னரது பெண் மக்கள் இருவரும் தங்களது கணவர் தண்டத் தேவரது சிதையில் விழுந்து உடன் கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டனர். அவர்கள் உயிர் துறந்த இடம் திப்பாஞ் சகானி - இன்றும் தங்கச்சிமடம் அரண்மனை எதிர்ப்புறம் உள்ளது. காலப்போக்கில் இந்த இரு சகோதரிகளது தியாகத்தை நினைவூட்டும் வண்ணம் தோன்றிய இரு மடங்களும் அக்காள்மடம், தங்கச்சிமடம் என்ற தனித்தனி ஊர்களாக எழுந்துள்ளன. இந்த இரு சகோதரிகளுக்குத் தமக்கையும் சிவகெங்கை மன்னரது மனைவியுமான அகிலாண்டேஸ்வரி நாச்சியார் இந்த இரு மடங்களையும் தோற்றுவித்து இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. 6) பாம்பன் இராமேஸ்வரம் திவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு துறைமுகம் சேதுபதி மன்னர்களது ஆட்சியில் குறிப்பாக கி.பி. 17. 18ம் நூற்றாண்டுகளில் மிகச் சிறப்பாக விளங்கிய ஊர்.