பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |45 7) கந்தமாதனம் இது இராமேஸ்வரம் நகருக்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் அமைந்துள்ள இடம். இயல்பாகவே சற்று உயரமாக அமைந்துள்ள இந்தப் பகுதியில் சுமார் 30 அடி உயரத்தில் பாறைக் கற்களால் அமைக்கப்பட்ட தளத்தின் மீது ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இராமபிரானது திருப்பாதங்கள் எனக் கருதப்படும் புனித இடம் உள்ளது. இந்த மண்டபத்தின் மீது மற்றொரு மண்டபமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலேயுள்ள இந்த மண்டபத்திலிருந்து இராமேஸ்வரம் திவினை நான்கு புறமும் தெளிவாகக் காணலாம். இந்த இடத்தை வட மாநிலத்தில் இருந்து வருகின்ற பக்தகோடிகள் பூரீ ராம வுருகா எனப் பக்திப் பரவசத்துடன் போற்றி வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் இராமேஸ்வரம் திருக்கோயிலில் நடைபெறும் வசந்த விழாவின் பொழுது சுவாமியும். அம்பாளும் இரண்டாம் திருநாளன்று இங்கு வந்து பூஜைகளை ஏற்றுத் திரும்புகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் வரைந்த கந்த புராணத்திலும் கி.பி.12ம் நூற்றாண்டு வரலாற்று ஏடுகளிலும் இந்த இடத்தைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. குமரக் கடவுளை எதிர்த்து நின்ற சூரபத்மனை அவனது தளபதியான வீரவாகுத் தேவர் இங்கே சந்தித்தார் என்கிறது கந்தபுராணம். கி.பி. 1169-ல் பராக்கிரம பாண்டியனுக்கு உதவி செய்வதற்காக இலங்கை மன்னர் அனுப்பி வைத்த சிங்களவர் படை இந்தப் பகுதியில் தரையிரங்கியது என்பது வரலாறு. 8) அனுமார் கோவில் இராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு வடக்குப் புறத்தில் இந்த அனுமார் கோவில் அமைந்துள்ளது. சிவலிங்கப்