பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இராமர் செய்த கோயில் என்பது காரைக் கால் அம்மையாரது புராணம் தரும் செய்தியாகும். இமயமலை தமிழகத்திற்கு வடக்கே வெகு தொலைவில் இருந்த பொழுதும் சங்க காலத்தில் இந்த மலை தமிழக மன்னர்களது வீரத்திற்கு வரம்பாகக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுக்கு இமயவரம்பன் என்ற சிறப்புப் பெயர் இருந்தது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். இமயத்தில் தனது இலச்சினையைப் பொறித்த செய்தி சங்க இலக்கியமாகிய பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தில் காணப்படுகிறது. 'தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தனைப் பிணித்தோன்” என சங்க காலப் பாட்டு ஒன்று அவன் புகழ் பாடுகிறது.' இன்னொரு அரசனான சேரன் செங்குட்டுவன். வடவாரிய மன்னர் மீது 'தண்டெடுத்து அவர்தம் தருக்கழித்து மீளுகையில் இமயத்தில் மீன் தவழுமிமய நெற்றியில் விளங்கு விற்புலிகயல் பொறித்தான் ... " என இளங்கோ அடிகளது சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பரணிபாடிய செயங்கொண்டார் சோழன் திருமாவளவனது பாய்புலிச் சின்னத்தைப் பண்டைய இமயத்தில் பதித்ததைப் பாடியுள்ளார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில்: “கொடுவரிக் கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி நெடுநீர்க் கெண்டையோடு பொ றித்த” 1. அகநானூறு பாடல் எண் 396 2. செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி பாடல் எண்