பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 47 சமயத்தைத் தோற்றுவித்தார். அதுதான் பின்னர் சிக்கிய மதம் என அழைக்கப் பெற்றது. அதுவரை பெரும்பாலான இந்திய மக்களினால் பின்பற்றப்பட்டு வந்த இந்து மதத்தின் சிறந்த பண்புகளையும் அடுத்து இந்திய மக்களிடையே இடம் பெற்ற இஸ்லாமிய மதத்தின் ஆரவாரமற்ற ஏகதெய்வ கொள்கையையும் கலந்த இனைப்பாக இந்தப் புதிய சிக்கிய மதம் மக்களிடம் இடம் பெற்றது. இந்த சமயத்தைத் தோ ற்றுவித்த குருநானக் அவர்களது தெய்வீக சிந்தனைகளை கொண்ட கிரந்த் சாகிப் என்ற தொகுப்பு சிக்கிய மக்களது திருமறையாகப் போற்றப்படுகிறது. குருநானக் இந்திய நாட்டைத் தவிர்த்து அரேபியா. இலங்கை போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து அங்கு நிலவிய இஸ்லாமிய பெளத்த சமயக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் நன்கு அறிந்திருந்தார். குருநானக் அவர்கள் இலங்கை சென்று திரும்பும் வழியில் இராமேஸ்வரத்தில் சிலகாலம் தங்கினார். அந்த இடம் பிற்காலத்தில் அவரது தொண்டர்கள் சிலரால் கல்லினால் அமைக்கப்பட்ட மண்டபமாக இருந்து வருகிறது. குருத்வாரா அல்லது உதாசிமடம் என அழைக்கப்பட்டு வருகிறது. உபாசகர் என்ற பொருளில் சிக்கிய மதத்தில் உதாசி என்று வழக்குப் பெற்றுள்ளது. இராமேஸ்வரத்திற்கு வந்து செல்கின்ற சிக்கிய மக்களின் தங்குமிடமாக இந்த அமைப்பு இருந்து வருகிறது. 1o) நம்பு நாயகி அம்மன் கோயில் இராமேஸ்வரம் நகரின் தெற்கே தனுக்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இராமேஸ்வரம் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாளது மற்றொரு முகூர்த்தமாக இங்குள்ள அம்மன் கருதப்படுகிறது. மேலும் இராமேஸ்வரம் நகரின் தெற்கு எல்லையின் காவல்