பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 48 இராமர் செய்த கோயில் தெய்வமாக இந்த அம்மன் கருதப்படுகிறது. ஆதலால் பக்தர்கள் இந்த அம்மனிடம் தங்களது அனைத்துக் குறைபாடுகளையும் தெரிவித்துத் திர்வு காண்பதற்காக இங்கு நாள்தோறும் கூட்டமாக வந்து சேருகின்றனர். உடல் நலிவு நீங்க. பெண் குழந்தைகளின் திருமணம் நடைபெற, அவர்கள் மகப்பேறு எய்த, போன்ற பல வேண்டுதல்களை இந்த அம்மன் நிறைவேற்றி வைப்பதாக மக்கள் நம்புகின்றனர் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசித் திங்களில் இரண்டு நாட்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்தத் திருக்கோயிலும் இராமேஸ்வரம் பிரதானக் கோயிலுடன் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக உட்பட்டு இருப்பதை இராமநாதபுரம் மன்னர் முத்துவிஜய ரெகுநாத சேதுபதியின் செப்பேடு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. 1) பாம்பன் = = இராமேஸ்வரத்தைப் பற்றிய விவரங்களை இந்த நூலில் கொடுக்கும் பொழுது இராமேஸ்வரம் திவின் மேற்கு கோடியில் உள்ள பாம்பனையும் இந்த ஊருக்கு மேற்கே உள்ள மண்டபம் தோனிக்கரையையும் இணைக்கும் கடல் பாலத்தினை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. இராமேஸ்வரம் திவினை இந்திய நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் இந்தப் பாலம் பற்றிய செய்திகளை இங்கு பார்ப்போம். வரலாற்று ஆவணங்களில் கி.பி. 17ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பாம்பன் என்ற பெயர் காணப்ப வரில்லை. மன்னார் வளைகுடாவினை கி.பி. 1525 முதல் 5). I П. 1584 отлоо, тш тобт காலத்தில் ஆக்கிரமித்திருந்த போர்ச்சுகல் நாட்டுப் படையணி பற்றிய ஆவணங்களிலும் இந்தப் பெயர் கானப்படவரில்லை. தளவாய் சேதுபதி என்ற இரண்டாவது சடைக்கன் சேதுபதி மீது மதுரை திருமலை நாயக்கர் மிகப் பெரிய படையெடுப்பினைத் தொடர்ந்த பொழுது இராமேஸ்வரம் திவில் உள்ள அந்த இராம - ||