பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 49 மன்னரை முறியடிப்பதற்காகத் திருமலை நாயக்கரது தளவாய் போர்ச்சுகல் நாட்டவரது தலைமை இடமான கோவாவிற்குச் சென்றார். அவர்களது படை உதவியைப் பெறுவதற்காகக் கையெழுத்திட்ட உடன்படிக்கையில் பாம்பன் துறைமுகத்தின் பெயர் முதன்முறையாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. பாம்பன் கால்வாய் என அழைக்கப்படும் இந்தக் கடற்பரப்பில் முதன் முதலாக ஒரு பாலத்தினை அமைத்து மதுரைப்படைகள் இராமேஸ்வரம் திவிற்கு சென்றதை இராமப்பையன் அம்மானை என்ற நாட்டுப்புற இலக்கியம் தெரிவிக்கின்றது. ஆனால் இப்பொழுது உள்ள ரயில்வே - கடல் பாலத்தை அமைத்தவர்கள் ஆங்கில அரசாங்கத்தினர் ஆவர். தென்னிந்திய ரயில்வேயின் பாதையினை மதுரையிலிருந்து கி.பி.1914-இல் இராமேஸ்வரம் திவிற்கு நீடித்த பொழுது சுமார் 2.7 கி.மீ தொலைவிற்கு கடல்மேல் இந்த ரயில் பாலம் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஸ்வைட்சர் என்ற பொறியாளரால் தொங்கு பாலமாக அமைக்கப்பட்டது. இந்தக் கடல் வழி மூலமாக துத்துக்குடியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தோணிகளில் பலவிதமான பொருட்கள் அனுப்பப்பட்டு வந்ததால் அந்த கடல்வழி வணிகத்தை ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் மேற்கொண்டிருந்த பொழுது இந்தக் கடல்வழியில் உள்ள பாறைகளை அப்புறப்படுத்தித் தோணிகளின் போக்குவரத்திற்கு ஏற்றவாறு முதலில் கி.பி.1838, 1854-இல் கால்வாயை அமைத்தனர். அந்தக் கால்வாயின் மொத்த நீளம் கிழமேலாக 96.8 அடி அகலம் 80 அடி ஆழம் 15 அடி இந்தப் பகுதியின் மேல் எவ்வித ஆதாரமுமின்றி தொங்கு பாலமாக இரயில் பாதை அமைக்கப்பட்டது ஒரு விந்தையாகும். (தோணிகளது போக்கு வரத்திற்கு இடர்ப்பாடு இல்லாமல் செய்வதற்கு.)