பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - V111 இராமேஸ்வரம் குழகள் 1) மறவர்கள் இன்றைய இராமேசுவரத்தில், இந்து. இஸ்லாம். கிறிஸ்துவ சமயங்களைக் சேர்ந்தவர்கள் குடிமக்களாக இருந்து வருகின்றனர். ஆனால் மிகத் தொன்மையான காலந்தொட்டு இங்கு மறவர் இன மக்கள்தான் மிகுதியாக இருந்து வந்ததாகத் தெரிகிறது. இங்கு இராமலிங்கப் பிரதிட்டை செய்த இராமபிரான் அயோத்தி திரும்புவதற்கு முன்னர் இங்கிருந்த மறவர் தலைவரைப் புனித சேது அனைக்கு காவலராக (சேதுபதி) நியமித்தார் என்ற செவிவழிச் செய்தி இதனை உறுதி செய்கிறது. மேலும் இந்தப் பகுதி மட்டுமல்லாமல் எதிர்கரையான இலங்கை யாழ்ப்பாணத்தை ஒட்டிய பகுதிகளிலும் மறவர் இன மக்கள்தான் மிகுந்து இருந்தனர். இதனை உறுதிப்படுத்துவதாக இலங்கையின் வடமேற்குப் பகுதியில் யாழ்ப்பாணத்தைத் தொட்டவாறு கிழக்குப் பகுதியில் வடமளாச்சி (வடமறவர் ஆட்சி) தென்மறாச்சி (தென்மறவர் ஆட்சி) வன்னி (மறவர்) என்ற சொல்லும் மறவரைக் குறிப்பது ஆகும். நெல்லை மாவட்ட சிவகிரியின் முந்தைய பாளையக்காரரும். ஜமீன்தாரருமாக இருந்தவர்கள் வன்னிய மறவர் என்ற பிரிவினர் இங்கு குறிப்பிடத்தக்கது.