பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 2 இராமர் செய்த கோயில் இவர்கள் கி.பி. 1639 - 40ல் இராமேசுவரம் திவில் தளவாய் இரண்டாவது சடைக்கன் சேதுபதிக்கும். மதுரைப் பேரரசர் திருமலை நாயக்கரது தளபதி இராமப்பையன் தலைமையில் வந்த பெரும்படைக்கும் நிகழ்ந்த பெரும்போரில் சேதுபதி மன்னரது அணியில் இவர்கள் போரிட்டனர் என்பது வரலாறு. இந்த மறவர்களது குடியிருப்பு இராமேஸ்வரம் நகரில் மட்டுமல்லாமல் இராமேசுவரத்தின் மேற்கு எல்கையை யொட்டிய பகுதி இப்பொழுது செம்மா மடம் என வழங்க பெறுகிறது. இவர்களில் பிற்காலத்தில் சிறப்புற்று இருந்த செம்மனத்தேவர் என்பதும் அவர் அமைத்த மடம் தான் = - - 4ங் s . לל - செம்மனத்தேவர் மடம் 'செம்மா மாடம் நாளடைவில் எனத்திரிந்து வழங்குவது அறியத்தக்கது. 2) &്ഠാനLിLif இராமேசுவரத்தில் இஸ்லாமியர் எப்பொழுது குடியேறி வாழத் தொடங்கினர் என்பதைக் குறிப்பிடும் ஆவணம் எதுவும் இல்லை என்றாலும் மனிதவர்க்கத்தின் ஆதி பிதாவான ஆதாமின் மக்களான ஆபில் காபில் சகோதரர்களது அடக்கவிடம் இராமேஸ்வரத்தில் அமைந்து இருப்பது இவர்கள் இராமேசுவரத்தின் தொன்மைக் குடிகள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. கி.பி.1311-ல் தென்னாட்டில் சூறாவளி கொள்ளை நடத்திய தில்லி தளபதி மாலிக்காபூர் பூரீ ரங்கம். சிதம்பரம். மதுரை. திருக்கோயில்களின் திரு ஆபரணங்கள் போன்ற விலையுயர்ந்த அணிமணிகளைக் கொள்ளை கொண்ட பிறகு கி.பி.1311 ஏப்ரல் 13ம் தேதிக்கும் ஏப்ரல் 24ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மாலிக்காபூரும் அவனது படை வீரர்களும் இராமேசுவரம் வரை சென்று திரும்பினர். இந்த வரலாற்று உண்மையினை இராமேஸ்வரம் தலவரலாறும். வல்லாள இராவண யுத்தம் என்ற கன்னட கதைப் பாடலும் வரலாற்றாசிரியர்களான R.C.மஜீம்தார்.A.L. பாஷாம் ஆகியோர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.