பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| Հ (, இராமர் செய்த கோயில் 5) கிறிஸ்தவர்கள் இராமேஸ்வரம் திவில் உள்ள கிறிஸ்தவர்களில் மிகப்பெரும் பாலோர் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை தங்கச்சிமடத்திலும் மூக்கையூரிலும் இவர்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது இராமேஸ்வரம் நகரிலும் திவின் பல பகுதிகளிலும் இவர்களது குடியிருப்புகள் உள்ளன. வரலாற்று ஆவணங்களின்படி பிரான்சிஸ் சேவியர் என்ற கிறிஸ்த்தவ பாதிரியார் கி.பி. 1543 - 44ம் ஆண்டுகளில் தமது சமயப்பணியைத் துரத்துக்குடியில் தொடங்கிய பிறகுதான் இந்தப் பகுதியில் கிறிஸ்தவ குடியிருப்புகள் எழுந்தன. அவரையடுத்து இத்தாலிய நாட்டு அந்தோணி கிரிமினாலிஸ் என்ற பாதிரியாரும் இந்தப் பகுதியில் சமயப் பணியைத் தொடர்ந்தார். ஆனால் இந்தப் புதிய சமயத் தினருக்கான வழிபாட்டுத் தலங்கள் எழவில்லை. ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு கி.பி.1639ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னரை அடக்குவதற்காக மதுரைப் பேரரசர் திருமலைநாயக்கர் இராமநாதபுரம் மீது பெரும்படையெடுப்பை மேற்கொண்டார். மறவர்களை எளிதில் வெல்ல முடியாது என்ற முடிவிற்கு வந்த திருமலைநாயக்கர் தமது தளபதி இராமப்பையனை கோவாவிற்கு போர்ச்சுக்கிசியர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் ஆயுத உதவி பெறுவதற்காக அனுப்பினார். போர் ச்சுக்கிசிய கவர்னருடன் இராமப்பையன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இராமநாதபுரம் சிமையில் கிறிஸ்தவ சமயத்தை ஏற்க விரும்புகிறவர்களைக் கிறித்தவ பாதிரியார்கள் அவர்களுக்கு ஞானஸ்நானம் அளித்து கிறிஸ்தவர் ஆக்கிக் கொள்ளலாம் என்ற நிபந்தனையின் பேரில் திருமலைநாயக்கருக்கு போர்ச்சுக்கிசியர் ராணுவ உதவிகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இராமேஸ்வரம் கரையின் 1) Sathya Natha Iyyar - Histry of Madura Nayaks 1924 Page