பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|5S இராமர் செய்த கோயில் சொக்க வார். இவர்கள் 512 பேர் எனக் குறிப்பிட் டுள்ளா "மெய்நூல் துறையின் விதிவழியே பூசிக்கும் ஐந்நூற்றுப் பன்னிருவர் ஆரியரும்” என்பது புலவரது வாக்கு. இந்தக் குருக்கள் எப்பொழுது எந்தச் சூழ்நிலையில் இந்தத் திருக்கோயில் சேவையில் இணைந்தனர் என்பது தெரியவில்லை. ஆனால் கி.பி.1747 ஆம் ஆஈண்டு குமார முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர் இந்த மராட்டா குருக்களுக்கும் தமிழ் ஆரியர்களுக்கும் இடையிலான இராமேசுவரம் லட்சுமண திர்த்தக்கரை உரிமை இயல் வழக்கை விசாரித்த பொழுது இவர்கள் சார்பாகத் திருக்கோயில் ஆவணங்களை (இந்த வழக்கில் காலத்திற்கு முன்னு ற்று பன்னிரெண்டு ஆண்டுக்கான) பரிசிலித்தாகக் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அந்த குருக்களின் முன்னோர் கி.பி.14:35-ல் இராமேசுவரத்தில் குடியேறி இருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. (அதாவது பதினைந்தாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் சின்ன உடையான் சேதுபதி ஆட்சியில்) ஆனால் இன்று இவர்களது தாயகம் மராட்டிய மாநிலம் அல்ல தமிழகம் தான். இவர்களது தாய்மொழியும் தமிழாகிவிட்டது. இவர்களில் சிலர் மட்டும் கோயில் திருப்பணிகளில் உள்ளனர். தில்லைமூவாயிரவர் என்பது போன்று இவர்களது (512 பேர்களும்) தொடர்ந்து பல ஆவணங்களின் குறிப்பிடப் படுகின்றனர். இந்த அறிவார்ந்த மக்களில் பதினைந்தாம் நூற்றாண்டில் மிகச் சிறப்புற்று விளங்கியவர் பண்டிதர் கயாதரர். இவர் தமிழ்மொழிக்கு அளித்துள்ள காணிக்கை “கயாதர நிகண்டு” என்ற சொற்களஞ்சிய நூல். இவர் இராமேசுவரம் இறைவன் மீது 'இராமேசுவரக் கோவை' ஒன்றும் இயற்றினார். ஆனால் இந்த நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. இவர்களது அறிவாற்றலையும் ஆன்மீகப்