பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| இராமர் செய்த கோயில் பாவங்களையும் போக்கவல்லது இங்கு பிரபு மகாதேவர் எனக்கு அருள் புரிந்தார். இவ்வாறு புட்பக விமானத்தில் இலங்கையிலிருந்து அயோத்தி நோக்கிப் புறப்பட்டுச் சென்ற இராமன் சிதா பிராட்டிக்குச் சேது வைக் காண்பித்து அதன் பெருமையைக் கூறியதாக ஆதிகாவியமான வால்மீகி இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மகாகவி, கம்பனும் தனது காவியத்தில் இந்தச் செய்தியை சேது அணையின் புனிதத்துடன் போற்றிப் பாடிய பொழுது, 'கற்றையம் சடையில் மேவிய கங்கையும் சேது ஆகப் பெற்றிலம் என்று கொண்டே பெருந்தவம் புரிகின்றாளால் மற்று இதன் துய்மை எவ்வாறு உரைப்பது?” என மயங்கிப் பாடுகிறார் : இவ்விதம் இராமபிரான் அமைத்த சேது. கங்கையிலும் மிக்க புனிதமுடையது என்ற கருத்து மக்களிடையே நீண்ட நெடுங்காலமாக நிலவி வந்துள்ளது. இதனை எட்டாம் நூற்றாண்டில் காலடியில் பிறந்த ஆதிசங்கரர் இமயம் வரை பாதயாத்திரை செய்து தெற்கே திரும்பிய காரணத்தினால் இத்தகைய நம்பிக்கை மக்களிடம் மேலும் வலுவடைந்தது. 1 வால்மீகி இராமாயணம் - யுத்தகாண்டம் 2. கம்பராமாயணம் - யுத்தகாண்டம்- மீட்சிப் படலம், பாடல் எண் 7 இராம - 2