பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 72 இராமர் செய்த கோயில் வழிபடுவதும் பயனற்றது. உடம்பாலும் மனத்தாலும் து ய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால் தாங்களே துய்மையற்றவர்களாக இருந்து கொண்டு பிறருக்கு மத போதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியையே அடைகிறார்கள். புறவழிபாடு என்பது அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே. அக வழிபாடும் துய்மையும் தான் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படுகின்ற புற வழிபாடு பயனற்றது. இதனை மனத்தில் பதித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். தாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு திர்த்தத் தலத்திற்குச் சென்றால் அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கிழான நிலைக்கு இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்து விட்டனர். துய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்கின்ற ஒருவன் ஏற்கனவே இருக்கின்ற தன் பாவங்களுடன் மேலும் ஒன்றைக் கூட்டுகிறான். புறப்பட்ட போது இருந்ததை விட மோசமானவனாக வீடு திரும்புகிறான். திர்த்தத் தலங்கள் புனிதமான பொருட்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திர்த்தத் தலங்களே. நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனித மற்றவர்கள் இருப்பார்களானால் தெய்வீகம் மறைந்து விடும். திர்த்தத் தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான காரியம் சாதாரண இடங்களில் செய்யப்படும் பாவங்களை எளிதாக நீக்கிக் கொள்ள முடியும். ஆனால் திர்த்தத் தலங்களில் செய்யப்படும் பாவத்தை நீக்கவே முடியாது. மனத்துய்மை. பிறருக்கு நன்மை செய்வது - இதுவே GT SU3L I வழிபாடுகளின் சாரமாகும். ஏழையிடமும்