பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 73 பல்வினரி மும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கிரகத்தில் மட்டுமே அவரைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது. ஒரே ஒர் ஏழைக்கு ஆயினும், அவனது ஜாதி. இனம், மதம் போன்ற எதையும் பாராமல், அவனிடம் சிவபெருமானைக் கண்டு அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் திருப்தி கொள்கிறார். கோயிலில் மட்டுமே தம்மைக் காண்பவனைவிட இவனிடம் அதிக மகிழ்ச்சி கொள்கிறார். ஒரு பணக்காரனுக்குத் தோட்டமொன்று இருந்தது. அதில் இரண்டு தோட்டக் காரர்கள் இருந்தார்கள். ஒருவன் சோம்பேறி, வேலையே செய்யமாட்டான். ஆனால் எஜமான் தோட்டத்திற்கு வந்தால் போதும், உடனே எழுந்து போய் கூப்பரிய கைகளுடன் அவரிடம் "ஒ என் எஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது” என்ற புகழ் பாடி அவர் முன்னால் பல்லை இளித்துக் கொண்டு நிற்பான். மற்றவன் அதிகம் பேசுவதே இல்லை. ஆனால் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும். காய்கறிகளையும் சாகுபடி செய்து நெடுந்தொலைவில் வசிக்கின்ற அந்த எஜமானின் வீட்டிற்குச் சு மந்து கொண்டு செல்வான். இந்த இரண்டு தோட்டக்காரர்களுள் யாரை எஜமான் அதிகம் விரும்புவார்? சிவபெருமான் தான் அந்த எஜமான். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக் காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள். ஏமாற்றுக்காரர்கள் அவர்கள் எதுவும் செய்வதில்லை. சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குண நலன்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஏழைகளான, பலவீனர்களான எல்லா மனிதர்கள். விலங்குகள் மற்றும் அவருடைய படைப்பு அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர்.