பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 5 இராமேஸ்வரம் கடற்கரையில் அமையப்பெற்றுள்ள சங்கர ஸ்துபியின் தோற்றம் இவ்விதம் புனிதமிக்க தலங்களை இணைத்துச் சொல்வதிலும். பேசுவதிலும் நமது முன்னோர்கள் ஆறுதலும் மகிழ்ச்சியும் அடைந்தனர் எனத் தெரிகிறது. இந்தப் புனிதத்தன்மை அங்குள்ள திர்த்தம் முர்த்தி தலம் ஆகியவற்றுள் ஒன்றினாலோ அனைத்தினாலோ ஏற்படுகின்றது. பல நூற்றாண்டுகளாக இந்திய நாடு முழுவதிலும் விரும்பிப் படிக்கப் பட்டும் பேசப்பட்டும் வரும் இராமாயணக் கதையின் பாத்திரப் படைப்புகளில் மனத்தைப் பறிகொடுத்த பக்தி உள்ளங்களில் படிந்த ஆழமான நம்பிக்கை அந்த மக்களைச் சம்பந்தப்பட்ட புனித இடங்களை நோக்கிப் புனித