பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 8 | 13. இ.டரி, 1804 14. ն). Ո, 1810 அவர்களது பரங்கிப்பேட்டை அக்கசாலையில் தயாரிக்கப்பட்ட பொன்னாலான பணம் சேதுபதி சிமையில் செலாவணியில் இருந்தது. இந்தப் பணம் ஒன்றுக்கு கி.பி.1802ல் எட்டு செம்மறி ஆடுகளை வாங்கலாம். அல்லது ஒரு நூறுபடி நெல் வாங்கலாம் என்ற அளவிற்கு அதன் மதிப்பு இருந்தது. அப்பொழுது இந்தப் பனத்திற்கு போர்ட்டோ நோவோ பக்கோடா நாணயம் என்று பெயர் இருந்தது. ஜயார்ஜ் வாலண்டைன் என்ற இங்கிலாந்து நாட்டுப் பிரமுகர் இலங்கையைச் சுற்றிப் பார்த்துவிட்டு கப்பல் மூலமாக தலை மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கு 25.1.1804ல் வருகை தந்தார். இராமேசுவரம் திருக்கோயிலுக்கு அவரது வருகையின் பொழுது அவருக்கு அப்பொழுது ஆதினகர்த்த ராயிருந்த பதினான்கு வயது சின்ன இராமநாத பண்டாரம் வரவேற்பு வழங்கியதையும் அதன் தொடர்பாகத் திருக்கோயில் தேவ தாசிகள் சதிர் ஆடியதையும் அவரது பயன நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். Voyages and Travels to India (1809) ΡΡ. 342 - 343 இராமேசுவரம் திருக்கோயில் சேது இராமநாத பண்டாரம் கோயில் சடங்குகளை முறைப்படி நடத்தவில்லை என்று இராமநாதபுரம் ஜமீன்தாரிணி மங்களே ஸ்வரி நாச்சியார் இராமநாதபுரம் ஜில்லா கலெக்டருக்குப் புகார் அனுப்பினார்.