பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 % լ Ո 1816 16. கி.பி. 1822 இராமர் செய்த கோயில் Madurai District Records Vol. |157 (1810) Page 39 இராமேசுவரம் திருக்கோயிலுக்குச் சென்று தங்களது காணிக்கைகளைச் செலுத்தும் நெசவாளிகளை இராமநாதபுரத்தில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியில் நெசவுப் பட்டறை கங்காணி குத்தாலிங்கம்பிள்ளை என்பவர் தடுத்து வந்தார். இதனை யறிந்த ஜில்லா கலெக்டர். அந்த நெசவுப்பட்டறை அலுவலருக்கு உத்தரவு அனுப்பி அந்தப் பணியாளரது செய்கையைத் தடுத்தார். Madurai District Records Vol. No. 1 || 64 (1816 AD) Page 15 படகுப் போக்குவரத்திற்கு ஏற்றதாகப் பாம்பன் கால்வாயை மாற்றியமைக்க ஆங்கில கிழக்கு இந்தியக் கம்பெனியாரது பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் என்பவர் கி.பி. 1822-ல் அளவீடுகள் மேற்கொண்டார். இந்தக் கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணி கி.பி.1838-ல் தொடங்கியது. கி.பி.1844-ல் 8 அடி ஆழத்திற்கும் கி.பி. 1846-ல் 10.5 அடி ஆழத்திற்குமாக பணிகள் 32,000 பவுன் செலவில் செய்து முடிக்கப்பட்டன. பிரதான கால்வாய் 4232 அடி நீளத்திலும் 80 அடி ஆழமாகவும் அதனைத் தொடர்ந்து கிழக்கரை கால்வாய் என்ற இரண்டாவது கால்வாய் 12100 அடி நீளம் 150 அடி அகலம் 12 அடி ஆழமுமாக அமைக்கப்பட்டுள்ளது.