பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் -X11 புண்ணியர்களைப் பயந்த புனித பூமி தலம். திர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களை உடையது இராமேஸ்வரம் என்பதை முந்தைய பக்கங்களில் படித்தோம். இந்தப் புண்ணிய பூமியில் ஆன்மிகத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் அணி சேர்த்த புண்ணியர் சிலரை இங்கு பார்ப்போம். 1) பண்டிதர் கயாதரர் இராமேஸ்வரம் திருக்கோயிலின் கருவறையில் இராமநாத சுவாமிக்கும் ஏனைய இறைமேனிகளுக்கும் புஜை. அபிஷேகம் நைவேத்தியம் ஆகிய தெய்வ கைங்கரியங்களில் பல நூற்றாண்டுகளாக ஈடுபட்டு இருப்பவர்கள் மகாராவர்ட்ர பிராமனர்கள் ஆவர். இது தமிழக திருக்கோயில்களில் வழிபாட்டு நடைமுறைகளுக்கு வேறுபட்டது ஒன்று ஆகும். ஏனெனில் காஞ்சிபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலான அனைத்துத் திருக்கோயில்களிலும் கருவறையில் தெய்வ காரியங்களை நிறைவேற்றி வைப்பவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பிராமணர்கள் ஆவர். இந்த மகாராஷ்ட்ர பிராமணர்களை எப்பொழுது எந்த மன்னர்கள் கோயில் கைங்கரியங்களைச் செய்ய ஏற்பாடு செய்தனர் என்பது அறிவதற்கு இல்லை. ஆனால் இவர்கள் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதி மன்னரது செப்புப்