பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இந்த நூலில் பயின்று வருகின்ற வட்டார வழக்குகள் 1) கோயில் நடை திருக்கோயிலின் முகப்புப் பகுதியைக் குறிப்பதாகும். 2) பட்ட காணிக்கை சேதுபதி மன்னர்கள் சேதுநாட்டின் ஆட்சிப் பொறுப்பை - சேதுபதி பட்டத்தை ஏற்றதன் அறிகுறியாக இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு ஒரு கிராமத்தை காணிக்கையாக வழங்கி வந்தனர். பட்டத்திற்கு வந்த மன்னர் வழங்கும் முதல் காணிக்கை இங்ங்னம் பட்ட காணிக்கை எனப் பெயர் பெற்றது. 3) பஞ்ச தேசத்து ஆரியர் இராமேஸ்வரம் திருக்கோயிலின் ஆவணங்களின்படி ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மராட்டம். கொங்கன ம். கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்து பிராமணர்கள் (ஆரியர்) இராமேஸ்வரத்தில் குடியேறி உள்ளனர். அப்பொழுதெல்லாம் இந்திய மலைக்குத் தென் பகுதியிலுள்ள மக்கள் மட்டும் தான் இராமலிங்க தரிசனத்திற்காக யாத்திரையாக வந்து சென்றனர். அவர்களது மதச் சடங்குகளை இராமேஸ்வரத்தில் மேற்கொள்ளுவதற்கும் இராமேஸ்வரம் திருக்கோயிலின் அன்றாடப் பணிகள் பலவற்றை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை இந்த வேத