பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 2[] | வேளை பூஜைக்கும் மற்றொரு வேளை பூஜைக்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தில் சிறப்பான சில பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. அவைகள் சந்தி என்றும் அவை நடைபெறும் நேரம் கால சந்தி என்றம் அழைக்கப்பட்டன. இத்தகைய சந்தி பூஜை ஒன்றைத் திருவிதாங்கூர் மன்னர் (பெயர் தெரியவில்லை) இவர் இராமேஸ்வரம் யாத்திரையின் போது (பெரும்பாலும் 16வது நூற்றாண்டில்) சந்தி பூஜை நடைபெறுவதற்கு உரிய திரவியத்தைக் கோயிலுக்கு வழங்கி உள்ளார். அதனைக் கொண்டு இன்றளவும் திருக்கோயிலில் காலை நேர திருஅனந்தல் பூஜைக்கு அடுத்து உதய மார்த்தாண்ட சந்தி என்ற சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இத்தகைய சந்தி பூஜைகளைப் பாண்டிய மன்னர்கள் பலர் பல திருக்கோயில்களில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்த நிகழ்ச்சிகளைப் பல கல்வெட்டுக்கள் வழி அறிய முடிகிறது. 6) கடவுச் சீட்டு இராமேஸ்வரம் திவிலிருந்து வெளியே செல்லுவதற்கும் திவிற்குள் வருவதற்கும் வழங்கப்படும் அனுமதிச் சிட்டு. 7) அள்ளுத்தீர்வை நவதானியங்கள் விற்பனைக்காக வைத்திருப்போரிடமிருந்து திர்வையாக பெறக்கூடிய பணத்திற்குப் பதிலாக அந்த தானியங்களின் மூலையில் இருந்து இரு கைகளையும் சேர்த்து அள்ளி எடுத்துக் கொள்ளும் தானியம் அள்ளுத் திர்வை எனப்பட்டது.