பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சுவாமி விவேகானந்தரின் இராமேஸ்வரம் வருகை இந்தியத் திருநாட்டிற்கு கி.பி. 19ம் நூற்றாண்டு வழங்கிய அருட்கொடை சுவாமி விவேகானந்தராவார். இணையற்ற தத்துவ மேதையாக பரி. ற்காலத்தில் புகழ்பெற்ற சுவாமிகளின் இயற்பெயர் நரேந்திர தத்தர். இன்றைய கல்கத்தா நகரின் புறநகர் பகுதியில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும் பொழுதே இவரது இதயத்தில் ஆன்மீகச் செறிவு நிறைந்திருந்தது. இறைவன் எத்தகைய ரூபத்தில் இருப்பான் அவனை எவ்விதம் காண்பது என்ற வினாக்கள் அவரது உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. கல்கத்தா நகரின் இன்னொரு பகுதியான காளிகட்டம் என்ற இடத்தில் காளியின் உபாசகராக வாழ்ந்த பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சரை ஒரு நாள் சந்தித்தார். அந்த இளைஞர் இறைவனை தமக்குக் காட்ட முடியுமா? என்ற கேள்வியையும் அந்த மகானிடம் இளைஞன் கேட்டான். மகிழ்ச்சியுற்ற அந்த மகான் அவருக்குச் சில மந்திரங்களை உபதேசித்து கண்களை முடிக் கொண்டு கடவுளது உருவரினைக் கண்டு கொள்க. அவ்விதமே அந்த இளைஞனும் செய்து இறைவனைத் தனது தியானம் மூலம் கண்டு களிப்பெய்தினார். அன்றிலிருந்து நரேந்திர தத்தர் பரீ இராம கிருஷ்னரிடம் எல்லையற்ற மதிப்பும் பக்தியும் கொண்டு அவரது பிரதான சிடராக விளங்கினார். கி.பி. 1893-ல் தமது குருவின் அனுமதி பெற்றுப் பாரத நாட்டின் புனிதத் தலங்கள் அனைத்தையும் காண்பதற்காக தல யாத் திரை ஒன்றை மேற்கொண்டார்.