பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 205 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பும் வழியில் சுவாமி பயணித்த கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. அங்கு கரையிறங்கிய சுவாமிகள் வடக்கே யாழ்ப்பானத் திற்குச் காரில் சென்று அங்கிருந்து படகு வழியாக இராமநாதபுரம் மன்னரது துறைமுகமான பாம்பனில் 22.1.1897-ல் பிற்பகலில் கரையிறங்கினார். மிகுந்த ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் சுவாமிகளுக்கு மன்னர் வரவேற்பு நல்கினார். அடுத்த இரு நாட்கள் மன்னரது பாம்பன் மாளிகையில் தங்கியிருந்து விட்டு 24.1.1897 அன்று சுவாமிகள் அண்மையில் உள்ள இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு விஜயம் செய்தார். சுவாமி தரிசனம் முடிந்த பிறகு கோயிலில் கூடியிருந்த பக்தகோ டிகளுக்கு அருளுரை ஒன்றை வழங்கினார். இந்த சொற்பொழிவு ஏற்கனவே இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 25.1.1897 அன்று பாஸ்கர சேதுபதி மன்னர் இராமநாதபுரம் அரசவையில் வரவேற்றுச் சிறந்த அரச மரியாதைகளை நல்கிக் கெளரவித்தார்.