பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 207 2) ஜார்ஜ் வாலன்டினா பிரபு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் சுற்றுப் பயணமாக இலங்கை வந்தவர். கி.பி. 1803 இல் இலங்கையின் எதிர்க்கரையான இராமேஸ்வரத்திற்கும் அடுத்து இராமநாதபுரத்திற்கும் வருகை மேற்கொண்டார். இவர் இராமேஸ்வரம் வந்தடைந்த பொழுது அப்பொழுது இராமேஸ்வரம் திருக்கோயிலின் ஆதின கர்த்தராக இருந்த சின்ன இராமநாதன் என்பவர் இராமேஸ்வரம் திருக்கோயிலில் அவருக்கு வரவேற்பு அளித்ததை தமது பயணக் குறிப்புகளில் விவரமாக வரைந்துள்ளார். அவரை இராமேஸ்வரம் திருக்கோயிலின் முகப்பில் மேளதாளத்துடன் ஆதின கர்த்தர் அவரைச் சிறப்பாக வரவேற்றதையும் அடுத்து அவரை கோயிலுக்குள் இட்டுச் சென்றதையும் குறிப்பிட்டுள்ளார். கோயில வாசலில் கோயிலைச் சேர்ந்த சதிர்க்காரிகள் (நாட்டிய நங்கைகள்) பாட்டுப் பாடியும் கைவிரல்களை அசைத்தும் கண்களை சிமிட்டியும் நாட்டியம் ஆடியதை மகிழ்ச்சியுடனும் வினோதமாகவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டியக் காரிகள் பாட்டுக்கு ஏற்றபடி கை விரல்களையும் கண் விழிகளையும் அசைத்து அபிநயம் பிடித்தது அவருக்கு ஒன்றும் புரியாத புதிராகவும் வியப்பாகவும் இருந்ததாக வரைந்துள்ளார். 3) ஜேம்ஸ் பர்தசன் குறிப்புகள் இந்தக் கோயில் இந்திய நாட்டிலுள்ள கோயில்களை விடப் பிரம்மாண்டதானதாகவும் கலை நுனுக்கம் நிறைந்த தாகவும் காணப்படுகிறது. இந்தப் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்கள் இறைவனுக்குச் செலுத்தியுள்ள மிகவும் சிறந்த காணிக்கையாக இந்தக்கோயில் காணப்படுகிறது. ஏராளமான கற்களைக் கொண்டு பல நூறு தொழிலாளிகள் பல வருடங்கள்