பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நிறைவு வரிகள் இந்தியத் திருநாட்டின் ஆன்மீக வளர்ச்சிக்கும் பாரம்பரிய சமய உணர்வுகளுக்கும் இருப்பிடமாக ஏறத்தாழ 14 நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கின்ற இராமேஸ்வரம் திருக்கோயிலைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் திரட்டி இந்த நூலில் கொடுக்கப்பட்டு உள்ளது. திராவிடக் கோயில் கட்டுமானப் பணிக்கும் சேதுநாட்டு முடியுடை வேந்தர்களான சேது மன்னர்களது தளராத முயற்சிக்கும் இறை நம்பிக்கைக்கும் ஏற்ற எடுத்துக்காட்டாக மட்டும் அல்லாமல் சேது நாட்டுச் ஸ்தபதிகள். கல்தச்சர்கள். பாட்டாளிகள் போன்ற தொழிலாளி வர்க்கத்தில் சிறந்த பங்களிப்பாக விளங்கி வருவது இந்தத் திருக்கோயில் ஆகும். இதனைப் பல நூற்றாண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த மதுரை நாயக்க மன்னர்கள். சேதுபதி மன்னர்கள், கன்னட நாட்டு மன்னர்கள் ஆகியோர்களுடன் இலங்கை நாட்டின் சிங்கள மன்னர்களது பங்களிப்பும் இந்தக் கோயிலின் கம்பீரமான தோற்றத்திற்கும் பிரம்மாண்டமான கட்டுமானங்களுக்கும் காரணமாக அமைந்திருப்பதை வரலாற்றின் ஏடுகளிலிருந்து அறியும் பொழுது நமது உள்ளத்தில் ஒரு புதுவிதமான நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இந்திய நாட்டின் சமய ஒற்றுமையையும் கலாச்சார மரபுகளையும் நமது முன்னோர்கள் எந்த அளவில் கண்ணுங் கருத்துமாகக் காத்து வந்துள்ளனர் என்பதையும் இந்தத் திருக்கோயில் கட்டியங் கூறிக் கொண்டு கலியுக வாமனனாக உயர்ந்து நிற்கின்றது. ஆனால் இந்தக் கலைப் பெட்டகத்தை சமய