பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் ஆராய்ந்த பொழுது புலத்திய மகரிஷி வழியினனான இராவணனைச் கூடித்திரியனான இராமன் கொன்றதால் பிரம்மகத்தி தோஷம் அவரைப் பற்றித் தொடர்ந்ததாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு இராமன் சேதுவிலே பூஜை செய்தான் அப்பொழுது கடற்கரை மணலினால் சிவலிங்கம் ஒன்றை அமைத்திடச் சிதாப் பிராட்டி உதவினாள் என்பதும், அந்த லிங்கத்தை பிரதிட்டை செய்து இருவரும் வழிபட்டதாகவும் கூறுவது மற்றொரு தொன்மைச் செய்தியாகும். இந்த நிகழ்ச்சியைத் திருநாவுக்கரசு சுவாமிகளும் திருஞான சம்பந்தரும் தங்களது தேவாரத் திருப்பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர். அவைகளில் இரண்டு பாடல்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப்பதிகம் தேவியை வவ்விய தென்னிலங்கைத்தச மாமுகன் பூவியலும் முடி பொன்றுவித்த பழிபோயற வேவியலுஞ்சிலை யண்ணல் செய்த விராமேச்சுரம் மேவிய சிந்தையினுள் கடம்மேல் வினைவீடுமே அணையிலைசூழ் கடலன்றடைத்துவழி செய்தவன் பனையிலங்கும் முடிபத்திறுத்த பழிபோக்கிய வினையிலியென்று மிருந்த கோயிலிராமேச்சுரந் துணையிலிது மலாப்பாதமேத்தத்துயா நீங்குமே. திருநாவுக்கரசர் பாடிய பதிகம் பலவுநாள் திமை செய்து பார்தன் மேற்குழுமி வந்து தொலை விலார் கொடியராயவரக்கரைக் கொன்று வீழ்த்த சிலையினான் செய்தகோயிற் றிருவிராமேச்சுரத்தைத் தலையினால் வணங்குவார் கடாழ் வராந்தவம தாமே.