பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 11 1) புராணங்களில் இராமேஸ்வரம் (1) ஸ்காந்தபுராணம் மானுட வடிவும் வாழ்வும் பெற்ற மனிதவர்க்கம் உயர்வதற்கும் நன்னெறியில் உய்ப்பதற்கும் உறுதுணையாக அமைந்து விளங்குவன 'நான்கு வேதமும் ஆறு சாஸ்திரமும், பதினெண் புராணங்களுமாகும். இவைகளில் இருந்து புராணங்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்திய சமுதாய மக்களது ஆன்மீக, அறிவு. வளர்ச்சிக்கு ஏற்ப வரையப்பட்டவை. அவை பெரும்பாலும் அன்று வடமாநிலங் களில் வழக்கில் இருந்த சமஸ்கிருத மொழியில் வரையப் பெற்றவை. அந்தப் புராணங்களில் நமது இராமேஸ்வரம் பற்றிய விரிவான தகவல்களை அளிப்பது ஸ்காந்தபுராணம் இந்தப் புராணத்தின் மூன்றாவது தொகுதியில் உள்ள ஐம்பத்து இரண்டு அத்தியாயங்கள். பிரம்ம காண்டம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் சேதுவின் பெருமை. இராமலிங்கப் பிரதிட்டை, கந்தமாதனம் மற்றும் இராமேஸ்வரத்திலும், இராமேஸ்வரத்திற்கு அண்மையில் உள்ளதுமான இராமாயண இதிகாசப் பாத்திரங்களுடன் தொடர்புடைய இருபத்து ஐந்து புனித திர்த்தங்கள் பற்றியும் செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தத் தீர்த்தங்களாவன : (1) சக்கரதிர்த்தம் (2) வேதாள வரததிர்த்தம் (3) பாபவிமோசன அல்லது கந்தமாதனதிர்த்தம் (4) சிதா திர்த்தம் (5) மங்கலதிர்த்தம் (6) அமிர்தவாபி (7) பிரம்மகுண்டம் (8)