பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4 இராமர் செய்த கோயில் வேண்டிய தானம் ஆகியவைகளையும் இராமநாத தரிசனத்தையும் குறிப்பிடுகிறது. இந்த நூலின் இறுதிப் பகுதியில் சைவத் திருத்தலங் களின் பட்டியல் கொடுக்கப்பட்டு அதில் இறுதி திருத்தலமாக இராமேஸ்வரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே கந்தமாதனக் குன்று. சேதுவின் மத்திய பகுதியில் இருப்பதாகவும் இராமரும். சிதையும். லட்சுமணரும் புனித திர்த்தங்களில் நீராடித் தங்களது பாவங்களைப் போக்கியதால் இராமர் இராமேசுவரரை பிரதிஷ்டை செய்து இருப்பதால், இங்கு நீராடலும் தானம் வழங்கலும் மிகவும் ஏற்ற முடையதாக சொல்லப்பட்டுள்ளது. (2) சிவமகாபுராணம் சிவமகாபுராணம் என்பது இராமேசுவர சிவத்தலம் பற்றிய இன்னொரு நூல், பாரத நாட்டின் பன்னிரு தலங்களில் உள்ள ஜோதிர் லிங்கங்களின் பட்டியல் அதில் கொடுக்கப் பட்டுள்ளது. அவையாவன (1) குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாக பட்டனம் (2) மராத்திய மாநிலத்தில் உள்ள பஞ்சவடிக்கு அண்மையில் உள்ள திரியம்பகம் (3) ஆந்திரா மாநிலத்தில் நந்தியாலுக்கு அண்மையில் உள்ள பூரீசைலம் (4) மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி (5) உஜ்ஜயினியிலிருந்து 90கல் தொலைவில் உள்ள ஓங்காரம் (6) மராட்டிய மாநில புனேக்கு அருகில் உள்ள பிர பீமசங்கரம் (7) தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் (8) மராட்டிய மாநில எல்லோராவிற்கு அண்மையில் உள்ள குங்குனேஷவரம் (9) இமயமலையில் உள்ள கேதாரம் (10) உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசி (11) பீகார் மாநிலத்தில் உள்ள வைத்தியநாதம் (12) சவாண்டிக்கு அருகில் உள்ள நாகநாதம் ஏற்கனவே சொல்லப்பட்டதற்கு மாற்றமாக இராமேஸ்வர லிங்கப்பிரதிஸ்டை. இலங்கைப் படையெடுப்பிற்கு முன்னதாக இராமபிரான் அங்கு நிறுவியதாக இந்தப் புராணம் தெரிவிக்கிறது. இராமர் சிதையைத் தேடிவரும் பொழுது இராமேஸ்வரம் கடற்கரைக்கு