பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 இராமர் செய்த கோயில் சுவை பொலியப் பாடியுள்ளார் இந்தப் புலவர். இந்த இலக்கியத்தில் மற்ற புராணங்களை வரி1 மிகுதியாக அப்பொழுது இராமேஸ்வரத்தில் அமைந்து இருந்ததாகக் கருதப்படும் 64 திர்த்தங்களின் சிறப்புப் பற்றிய செய்திகளை இந்த இலக்கியம் தருகிறது. திர்த்தம் என்ற வட சொல் தூய நீரை குறிப்பதாகும். இத்தகைய புனிதமான பவித்திரமான நீர்ச்சுனைகள். தடாகங்கள் ஆகியவைகளில் முற்காலங்களில் தேவர்களும், பின்னர் இராமாயண காலத்துப் பாத்திரங்களான இராமர். இலக்குவன். சிதை போன்றவர்கள் நற்கதி பெரும் மார்க்கத்துடன் இந்த நீர் நிலைகளில் நீராடி எழுந்தனர். ஆதலால் இந்தத் திர்த்தங்கள் அந்தப் புரான புருஷர்களது பெயரால் இன்றும் வழிபடப்பட்டு வருகின்றன. இந்தத் திர்த்தத் தடாகங்களில் நீராடுவதற்கு முன்னர் இராமநாதபுரத்திற்கு வடக்கே உள்ள உப்பூரிலும், தேவிபட்டனத்தில் நவபாஷணத்திலும் மூழ்கி எழுதல் வேண்டும் என்பதும். பின்னர் இராமேஸ்வரம் திவின் தொடக்கமான பாம்பனில் அமைந்துள்ள வைரவத் திர்த்தத்தில் நீராடியும் பின்னரே மேலேகண்ட இராமேஸ்வரம் திர்த்தங்களில் நீராட வேண்டும் என்பதும் ஐதிகம். ஆனால் தற்பொழுது இராமேஸ்வரத்தில் கால நீட்சியின் காரணமாகப் பல திர்த்தங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. அவைகளில் இப்பொழுது இருப்பவை கிழ்க்கண்ட திர்த்தங்களாகும். தீர்த்தங்கள் : (1) சேது திர்த்தம் (2) அக்னி திர்த்தம் (3) மகாலட்சுமி திர்த்தம் (4) காயத்ரி. சாவித்ரி. சரசுவதி திர்த்தங்கள் (5) சேது மாதவ திர்த்தம் (6) கந்தமாதன திர்த்தங்கள் (7) சங்கு திர்த்தம் 1. இந்த நூலினை முதன் முதலாக தமிழில் பதிப்பித்து வெளியிட்டவர் இராமநாதபுரம் வள்ளல் பாண்டித்துரைத் தேவரது தந்தை பொன்னுசாமித தேவர் ஆவார்.