பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| இராமர் செய்த கோயில் 4 ஜடாமகுடம் திர்த்தம் இராமேஸ்வரம் தனுஸ்கோடி நெடுஞ்சாலையில் இராமேஸ்வரத்திற்கு தெற்கே இரண்டு மைல் தொலைவில் இது சிறப்பாக அமைந்துள்ளது. இதனை கி.பி. 10வது நூற்றாண்டு இராமேஸ்வரம் திருக்கோயிலில் துலாபாரம் நடத்திய பராந்தக சோழன் கட்டளையின் படி இந்தத் திர்த்தம் அமைந்திருத்தல் வேண்டும். (5) கூர்ம புராணம் இதில் சூரிய வமிச மன்னர்களது செய்திகள் அளிக்கப் பட்டுள்ளன. மேலும் ரவிகுல இராமனது வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளது. இராவணனை வெற்றி கொண்ட இராமர். மகாதேவலிங்கத்தைச் சேதுவின் மத்தியப் பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும். அப்பொழுது சிவபிரான் பார்வதி தேவியுடன் இராமருக்குக் காட்சி கொடுத்ததுடன், இராமரது பிரதிவு டை லிங்கத்தைத் தரிசித்துச் சேதுவில் திர்த்தமாடியவர் களை விட்டு அனைத்துப் பாவங்களும் விட்டோடும் என்றும், கண்களது பார்வையில் இருந்து சேது மறைந்தாலும் ஊழிக்காலம் வரை அது நிலைபெற்று இருக்கும் என்றும் தெரிவித்ததாக இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. ' (6) பத்ம புராணம் இந்த நூலில் இராமேஸ்வரமும் சேதுவும் சொல்லப் படுகின்றன. இராமர் சேதுவை மூன்று பகுதிகளாகத் தமது வில்லின் நுனியினால் பிரித்தார் என்றும் இங்குச் சிவனை இராமர் வழிபட்டார் என்றும் இராமநாதசுவாமி ஆலயத்தின் பவித்ரம் பற்றிப் பிரசித்தம் செய்தார் என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. | ப עוי ானம் - அத்தியாயம் 31