பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | Q (7) செளரபுராணம் இந்த நூலிலும் இர பயனை .தை, சொல்லப்பட்டு இராமபிரான் இராமேசுவரத்தில் லிங்கப் திர்ைடை செய்ததையும் இதன் காரணமாக இங்குள் ள ஆலயத்திற்கு ஏற்பட்டுள்ள மகத்துவத்தையும். சேது ஆராதனையினால் ஏற்படும் பாவ விமோசனத்தையும் சிறப்பாகக் குறிப்பிடு -கிறது. ' (8) நாரதீய புராணம் இந்த நூலின் உத்தரகாண்டம் பகுதியில், இராமேஸ் வரத்தின் பெருமைகளைச் சிறப்பாக விவரிக்கும்பொழுது சேதுவில் இராமர் பிரதிவர்டை செய்த சிவலிங்கத்தைத் தரிசனம் செய்தாலே பாப விமோசனம் பெற்று வாழ்வின் வளங்கள் அனைத்தும் வாய்க்கப்பெறும் என்று குறித்து இருப்பதுடன் இங்குள்ள பல திர்த்தங்களையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. மேலே கண்ட புரானங்கள் அனைத்தும் (சேது புராணம் நீங்கலாக) வரையப்பெற்ற காலம், ஆசிரியர் பெயர் எதுவும் அறிந்து கொள்ள இயலாத வகையில் உள்ளன. இந்தப் புராணங்களில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றுக் கொன்று முரண்பட்டதாகவும் உள்ளன. இவற்றைப் போன்றே அவைகளில் குறிப்பிடப்பெறும் இடங்களும் இன்றைக்கு இராமேஸ்வரத்தினின்று வேறுபட்டனவாக குறிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்தப் புரானங்களின் அடிப்படை நோக்கம் இராமேஸ்வரத் திருத்தலத்தின் புனிதத்தையும் பெருமையையும் பறைசாற்றுவது ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட இந்த நூல்கள் இன்றும் மக்களிடையே பக்தி நெறியையும், மானிட 1. செளர புராணம் அத்தியாயம் 30 பாடல் 18 69 2. உத்திர காண்டம் அத்தியாயம் 76