பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 25 தானைத் தலைவர் வீரபாகு கந்தமாதனத்தில் இருந்த சூரபத்மனிடம் துது சென்றதாகப் பாடப்பெற்றுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டு இலக்கியமான வில்லிபுத்துராரது பாரதத்தில் பாரதப்போர் முடிந்த பிறகு அர்ச்சுனன் திர்த்த தலயாத்திரையாகச் சேதுவிற்கு வந்ததாக மிகுந்த கற்பனை நயத்துடன் + = . வாய்த்த திரு துணைவரோடும் சென்ற வழி இன்றளவும் துளவம் நாறும் சேது தரிசனம் செய்தா ன்” எனப் பாடியுள்ளார். இவ்விதம் சேதுவையும். இராமேசுவரத்தையும் தொடர்பு படுத்தும் செய்திகளை இங்கும் அங்குமாகப் பல இலக்கியங்களில் குறிப்பிட்டு வந்த புலவர்கள் நாளடைவில் இராம சரிதையை முழுமையாகப் பெரிய சிறிய காவியங்களாகவும் புனைந்து இருப்பதைக் காண முடிகிறது. இதற்கு வால்மீகியின் வடமொழி இராமாயணம் காலப்போக்கில் தமிழகத்தில் பரவலாகப் பயிலப்பட்டு வந்தது சிறப்பான காரணமாக அமைதல் வேண்டும். சொல் வளத்திலும், கற்பனை வளத்திலும் மிக்குயர்ந்து நின்ற கவிச்சக்கரவர்த்தி கம்பர். அப்பொழுது தமிழில் பாரகாவியங் களாகக் கருதப்பட்ட பரீ புராணத்திற்கும். பெரிய புராணத்திற்கும் இணையாகவும் அவைகளை விடச் சிறப்பாகவும் இராமாவதாரத்தைப் பாடினார். கவிநயமும், கற்பனை உயர்வும் விஞ்சி நிற்கும் இந்தக் கருத்துக் கருவூலத்தை மிஞ்சும் இலக்கியம் எதுவும் இதுவரை தமிழில் புனையப்படவில்லை என்பது வெள்ளிடை பதினைந்தாம் நூற்றாண்டினரான துளாவூர் திருமடத்து. நிரம்ப அழகிய தேசிக சுவாமிகள் இராமேசு வரத்துப் பெருமைச் சுவடாக சேதுபுராணத்தை இயற்றினார். (நகரத்தார் பெண்களுக்கு உபதேசம் செய்யும் மடாதிபதியின் மடம் குன்னக்குடிக்கு அருகில் உள்ளது.) தலம். திர்த்தம். மூர்த்தி