பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இராமர் செய்த கோயில் என்ற முப்பெரும் இலக்குகளை முழுவதுமாக விவரிக்கும் நூலாக உள்ளது. அடுத்துப் பதினாறாம் நூற்றாண் ல் இராமேசுவரத்தில் வாழ்ந்த பேரறிஞர் கயாதரர் இராமேசுவர இறைவர் மீது கோவையொன்று பாடினார். பதினேழாம் நூற்றாண்டில் தாயுமான வ அடிகள் இராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகையின் மீது மலைவளர் காதலி பதிகம் பாடினார். இவரைத் தொடர்ந்து தில்லையாடியில் பிறந்த சிர்காழி அருணாசலக் கவிராயர் எனப் புகழப்பட்ட முத்தமிழ்க் கவிஞர் இராம சரிதம் முழுவதையும் இராம நாடகக் கிர்த்தனைகளாகப் பாடினார். 17ம் நூற்றாண்டில் மதுரை சொக்கநாதப் புலவர் இராமநாதசுவாமியின் பெருமையைத் தேவை உலாவாகப் புனைந்து மகிழ்ந்தார். சென்ற நூற்றாண்டில் சேற்றுார் மு. ரா. சுப்பிரமணியக் கவிராயர் இராமேசுவரத்து அம்பிகைபர்வதனர்த்தினியின் மீது பிள்ளைத் தமிழ் ஒன்றைப் பயந்தார். தேவகோட்டை அட்டாவதானி சுப்பிரமணியன் செட்டியார் தேவை பிள்ளைத் தமிழ் என்ற நூலையும் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி பதிகம் ஒன்றையும் இராமநாதசுவாமி மீது இயற்றினார்கள்.